துணிகளை எத்தனை முறை வாஷ் பண்றீங்க? துவைக்காமலே அணியும் டிரஸ் தெரியுமா?

First Published | Aug 19, 2024, 7:41 PM IST

நமது துணிகளை குறைவாக துவைப்பதன் மூலம், நமது ஆடைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் குப்பையாக வீசப்படும் துணிகளின் அளவும் குறைகிறது.

Washing Tips

நமது துணிகளை குறைவாக துவைப்பதன் மூலம், நமது ஆடைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் குப்பையாக வீசப்படும் துணிகளின் அளவும் குறைகிறது. நமது சுமையைக் குறைக்கவும், சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும் துணி துவைப்பதை எப்படிக் குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

Washing Tips

சில துணிகளை வருடத்தில் சில முறை மட்டுமே துவைக்க வேண்டி இருக்கும். ஜீன்ஸ், கம்பளி போன்றவை அந்த வகையில் ஆண்டுக்கு சில முறை சலவை செய்தால் போதும்..

Tap to resize

washing clothes

ஜீன்ஸ் துணிகளை துவைப்பதற்கு முன் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். குளிர்கால கம்பளிகள் ஒரு பருவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை என்பதால் அவற்றையும் அடிக்கடி துவைக்கத் தேவையில்லை.

washing clothes

சில ஆடைகளை துவைப்பதற்கு முன் மூன்று முதல் ஐந்து முறை அணியலாம். முழு ஆடைகளையும் வாஷரில் போடுவதற்குப் பதிலாக ஈரமான துணியால் கறைகளை துடைப்பதன் மூலம், நேரத்தையும் தண்ணீரையும் சேமிக்கலாம்.

Washing Tips

சில துணிகளை சலவைக்குப் போடுவதற்கு முன் இரண்டு முறை அணிய முடியும். சட்டைகள், லெக்கிங்ஸ் போன்ற சில உடைகள் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அணிய ஏற்றதாக இருக்கலாம். குறிப்பாக கைத்தறி, ரேயான், பட்டு, கம்பளி போன்ற மென்மையான துணிகள் இதற்கு சிறப்பாக இருக்கும்.

Washing Tips

நிச்சயமாக, சுகாதாரமும் ஆரோக்கியமும் முக்கியம். அதில் சமரசம் செய்ய முடியாது. சில துணிகளை ஒவ்வொரு முறை அணிந்த பின்பும் சலவை செய்ய வேண்டும். வியர்வையில் நனையக்கூடிய உள்ளாடைகள் போன்றவை கண்டிப்பாக தவறாமல் ஒவ்வொரு முறையும் துவைக்க வேண்டியவை.

Washing Tips

ஆனால், துண்டுகள், சால்வைகள், துணிப்பைகள் போன்றவற்றை அடிக்கடி துவைக்கத் தேவையில்லை. அவை கறைபட்டிருப்பதாகத் தெரிந்தால் அப்போது துவைத்துக்கொள்ளலாம்.

Latest Videos

click me!