AC Cooling Tips : கரண்ட் பில் அதிகம் வராம, மணிக்கணக்கில் ரூமை கூலா வெச்சுக்க சில ஈஸி டிப்ஸ் இதோ. கரெக்டான கூலிங், ஸ்க்ரீன், ஃபேன் யூஸ் பண்ணாலே போதும், உங்க வீடு கூல் & கம்ஃபர்டபிளா இருக்கும்.
வெயில் காலத்துல ஏசி போட்டு ரூமை கூல் பண்றது ஈஸி. ஆனா, ஏசியை ஆஃப் பண்ண கொஞ்ச நேரத்துலேயே ரூம் மறுபடியும் அனலா கொதிக்க ஆரம்பிச்சிடும். இதுக்கு வெளியில இருக்குற வெயில் மட்டும் காரணம் இல்ல, நம்ம ரூம்க்குள்ளேயே வெப்பம் தங்குறதும்தான் காரணம். சில சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணா, ஏசி ஆஃப் பண்ணதுக்கு அப்புறமும் ரூமை ரொம்ப நேரம் கூலா வெச்சுக்கலாம்.
25
ரூம் கூலிங் டிப்ஸ்
ஏசி ஆஃப் பண்றதுக்கு முன்னாடி, ரூமை நல்லா கூல் பண்றது ரொம்ப முக்கியம். நிறைய பேர் கொஞ்ச நேரம் மட்டும் ஏசி போடுவாங்க. இதனால காத்து மட்டும்தான் கூல் ஆகும், ஆனா ரூம்ல இருக்குற சுவர்கள், ஃபர்னிச்சர் எல்லாம் சூடாவே இருக்கும். ஏசியை கொஞ்சம் அதிக நேரம் ஓடவிட்டீங்கன்னா, ரூம்ல இருக்குற எல்லா பொருளும் நல்லா கூல் ஆகிடும். இந்த குளிர்ச்சிதான் ரொம்ப நேரம் நீடிக்கும்.
35
கதவு, ஜன்னல்களை சரியா சீல் பண்ணுங்க
ரூம்ல இருக்குற கூல் காத்து வெளியில போனாலோ, இல்ல வெளியில இருக்குற அனல் காத்து உள்ள வந்தாலோ, ஏசி ஆஃப் பண்ணதும் குளிர்ச்சி போயிடும். அதனால, கதவு, ஜன்னல்கள்ல இருக்குற சின்ன சின்ன கேப்களை அடைக்கிறது ரொம்ப முக்கியம். இதுக்கு டோர் சீல் அல்லது தடிமனான ஸ்க்ரீன்களை யூஸ் பண்ணலாம். அப்போதான் கூல் காத்து ரூம்க்குள்ளேயே இருக்கும்.
சூரிய வெளிச்சம்தான் ரூமை சீக்கிரமா சூடாக்குறதுக்கு முக்கிய காரணம். அதனால, பகல் நேரத்துல தடிமனான ஸ்க்ரீன் அல்லது பிளாக்அவுட் ஸ்க்ரீன்களைப் பயன்படுத்துங்க. இதனால சூரியனோட வெப்பம் உள்ள வராது. ஏசி ஆஃப் பண்ணதுக்கு அப்புறமும் ரூம் ரொம்ப நேரம் கூலா இருக்கும். வெளிர் நிற ஸ்க்ரீன்கள் வெப்பத்தை அதிகமா உறிஞ்சாது, அதனால அது இன்னும் எஃபெக்டிவா இருக்கும்.
ஏசி ஆஃப் பண்ணதுக்கு அப்புறம், சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேனைப் போடுங்க. ஃபேன், ரூம்ல ஏற்கனவே இருக்குற கூலான காத்தை எல்லா இடத்துக்கும் பரவச் செய்யும். இதனால, குளிர்ச்சியான உணர்வு ரொம்ப நேரத்துக்கு இருக்கும். ஃபேன் ஸ்பீடை மீடியம்ல வெச்சுக்கோங்க, அப்போதான் கூல் காத்து மெதுவா ரூம் முழுக்க பரவும்.
55
வெப்பத்தை உருவாக்குற பொருட்களை ஆஃப் பண்ணுங்க
ஏசி ஆஃப் பண்ணதுக்கு அப்புறம், ரூம்ல டிவி, லேப்டாப், லைட்ஸ்னு நிறைய எலக்ட்ரானிக் பொருட்களை யூஸ் பண்ணா, அது வெப்பத்தை உருவாக்கும். இதனால ரூமோட வெப்பநிலை சீக்கிரமா அதிகமாகிடும். தேவை இல்லாதப்போ இந்த பொருட்களை ஆஃப் பண்ணி வெச்சா, குளிர்ச்சி அப்படியே இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.