பொதுவாக வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்கள் பித்தளை அல்லது செம்பில் தான் இருக்கும். பூஜை பாத்திரங்கள் எப்போதுமே சுத்தமாக இருந்தால் வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் பூஜை பாத்திரங்களில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் அது சீக்கிரமாகவே அழுக்காகி விடும். இதனால் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குள் இடுப்பு உடைந்து விடும்.
25
Pooja Vessels in Tamil
பூஜை பாத்திரங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து வந்தால் சுலபமாக கழுவி விடலாம், நேரமும் மிச்சம் ஆகும், பாத்திரங்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பூஜை பாத்திரங்களை கழுவாமல் நீண்ட நாள் அப்படியே வைத்தால் கழுவுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் மற்றும் உங்களது நேரமும் வீணாகும்.
இத்தகைய சூழ்நிலையில், நீண்ட நாள் சுத்தம் செய்யாமல் இருக்கும் பூஜை பாத்திரங்களை தண்ணீரில் சில பொருட்களை கலந்து சுத்தம் செய்தால் போதும். பாத்திரங்கள் பளபளனும் மின்னும். அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்கு முதலில் ஒரு வழியில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் டிஷ்வாஷ் லிக்விட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இந்த தண்ணீரில் பூஜை பாத்திரங்களை போட்டு சிறிது நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பாத்திரங்கள் நன்றாக ஊறியதும் அவற்றை தேய்த்து கழுவ வேண்டும். முக்கியமாக அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மிகவும் சுலபமாகவே அவற்றை சுத்தம் செய்து விடலாம்.
55
tips for cleaning pooja vessels in tamil
இந்த முறையில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை கழுவினால் போதும். பூஜை பாத்திரங்கள் சுத்தமாகவும், பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி நீங்கள் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதன் மூலம் அதிக சிரமம் ஏற்படாது. மேலும் உங்களது நேரமும் மிச்சமாகும்.