கிச்சனில் உள்ள சர்க்கரை டப்பாவில் எறும்புத் தொல்லையா? எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் எறும்புகளை விரட்டலாம். அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
சமையலறையில் எங்கு இனிப்பு இருந்தாலும் எறும்புகள் வந்துவிடும். அதிலும் சர்க்கரை டப்பாதான் அவற்றின் ஃபேவரைட். அடிக்கடி சுத்தம் செய்தாலும் எறும்புத் தொல்லையை ஒழிப்பது கடினம். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை டப்பாவுக்குள் எறும்புகள் வராமல் தடுக்க கிராம்பு ஒரு சிறந்த வழி. அதன் வாசனை எறும்புகளுக்குப் பிடிக்காது. ஐந்தாறு கிராம்புகளை நேரடியாக சர்க்கரை டப்பாவில் போடலாம். அல்லது, ஒரு சிறிய துணியில் கட்டி உள்ளே வைத்தால் போதும்.
24
எறும்புகளை விரட்டுவது எப்படி?
எறும்புகளுக்குக் கடுமையான வாசனை என்றால் பிடிக்காது. கிராம்பில் 'யூஜெனால்' (eugenol) என்ற இயற்கையான ரசாயனம் உள்ளது. இதன் வாசனை நமக்கு நன்றாக இருந்தாலும், எறும்புகள் போன்ற சிறிய பூச்சிகளால் இதைச் சகித்துக்கொள்ள முடியாது. அதனால், அந்த வாசனையை விட்டு அவை விலகி ஓடிவிடும். முதலில் சர்க்கரை டப்பாவை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். அதில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு, ஒரு துணியில் கிராம்புகளைக் கட்டி டப்பாவில் வையுங்கள்.
34
இந்த வாசனைக்கு எறும்புகள் வராது
கிராம்பின் வாசனை வெளியே வர வேண்டும், ஆனால் சர்க்கரையுடன் கலக்கக் கூடாது. நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு ஒருமுறை இந்த கிராம்புகளை மாற்றுவது நல்லது. வீட்டில் கிராம்பு இல்லை என்றாலோ அல்லது அதன் வாசனை பிடிக்கவில்லை என்றாலோ, வேறு சில பொருட்களையும் பயன்படுத்தலாம். வேப்பிலை அல்லது இலவங்கப்பட்டையை முயற்சி செய்யலாம். இந்த இரண்டின் வாசனையையும் எறும்புகள் விரும்புவதில்லை.
ஆனால், இவை சர்க்கரையுடன் கலந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை டப்பாவைத் தாண்டி, வீட்டின் மற்ற இடங்களிலும் எறும்புகள் வந்தால், வினிகரைப் பயன்படுத்தலாம். தண்ணீருடன் வினிகரைக் கலந்து எறும்புகள் வரும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும். கருமிளகுத் தூளைத் தூவலாம் அல்லது எலுமிச்சைத் தோலை எறும்புகள் வரும் இடங்களில் வைத்தாலும், அதன் புளிப்பு வாசனைக்கு எறும்புகள் வராது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.