குப்பையில் தூக்கி எறியும் இந்த பொருட்களை வைத்தே...தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய, அட்டகாசமான டிப்ஸ் இதோ..!

First Published Oct 15, 2022, 4:04 PM IST

Home cleaning tips tamil: வீட்டில் இருக்கும் தேவைற்ற பொருட்களை கொண்டே வீட்டை சுத்தம் செய்ய, தேவையான உதவு குறிப்புகள்  என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தீபாவளி, பொங்கல் வந்தாலே அந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு வரத்திற்கு முன்பில் இருந்தே வீட்டை நாம் சுத்தம் செய்ய துவங்கி விடுவோம். மற்ற நாட்களில் வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், விடாப்பிடியான கறைகளை அது ஏற்படுத்திக் கொள்ளும். எனவே, இப்படி நம்முடைய வீட்டை சுத்தம் செய்ய, கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே வீட்டை சுத்தம் செய்யலாம். அவை என்னென்னெ பொருட்கள் என்பதை பார்ப்போம்

Cleaning Tips-Switch board cleaning without fear

டிப்ஸ் 1: 

கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய, வழப்பான பொருட்களை பளபளப்பாக்க ஷேவிங் கிரீமை தடவி 15 நிமிடங்கள் கழித்து துடைத்தால் நீங்காத கரைகள் கூட நீங்கி பளபளக்கும்.

டிப்ஸ் 2:

அதேபோன்று,  கழிப்பறையில் உள்ள கறைகள், பாத்ரூம் வாலி மற்றும் மக்குகளில் இருக்கும் நாள்பட்ட உப்பு கறை, அழுக்குகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை தூவி 10 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் தேய்க்க எளிதில் நீங்கிவிடும்.
 

டிப்ஸ் 3:

நம்முடைய வீட்டில்  இருக்கும் அலுமினிய கடாய்களில் இருக்கும்,எண்ணெய் பிசுக்குகள் போவதற்கு ஒரு கைப்பிடி அளவிற்கு கோலமாவு, இதனுடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பிறகு இதை பஞ்சு ஸ்கிரப்பர் வைத்து நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இப்போது பார்த்தால், உங்களை பாத்திரம் புதிதாக வாங்கிய போல்  ஜொலிக்கும்.


மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

டிப்ஸ் 5:

எலுமிச்சைப் பழங்களை பயன்படுத்திவிட்டு மீதம் இருக்கும் தோலை தூக்கிகுப்பையில் போடாமல், அதனை சேகரித்து அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

 கிட்சன் மேடை, பாத்திரம் கழுவும் சிங்க் போன்றவற்றை தினசரி சுத்தத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  ஜன்னல் கதவுகளை சுத்தம் செய்ய சாக்ஸ் துணி பயன்படுத்தி துடைக்கலாம். அதற்கு வினிகரை தண்ணீரில் கலந்து சாக்ஸை நனைத்து துடைக்கலாம்.

டிப்ஸ் 5:

தண்ணீர் அதிகம் இருக்கும் பாத்திரம் கழுவும் ஓட்டை, பாத்ரூம்  ஓட்டை ஆகிய இடங்களில், கரப்பான் பூச்சி, பல்லிகள் அதிக அளவில் உலா வரும். அந்துருண்டையை அந்த இடத்தில் போட்டு வைத்தால் அதன் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள், பல்லிகள் போன்றவற்றின் தொல்லை இருக்கவே இருக்காது.

மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

click me!