சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்கை, செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமை ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் சிறப்புப் அருள் கிடைக்கும். எனினும், சுக்கிரன் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.