இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாததாக இருக்கிறது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் எந்த வயதில் யாருக்கு ஏற்ற நோய் வருகிறது என்பதை கணிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சிறுவயதில் இருந்தே உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதுதான். குழந்தைப் பருவத்திலேயே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி வைத்துக் கொண்டால், பிற்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். குழந்தைகளை ஓடி ஆடி விளையாட விடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம்.
27
நடைப்பயிற்சி
எனவே குழந்தைகளை சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். முக்கியமாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் மாடி இருப்பின் 15 நிமிடங்கள் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்க சொல்லலாம் அல்லது மொட்டை மாடி இருந்தால் அங்கு அரை மணி நேரம் நடைப் பயிற்சி செய்யலாம். வீடுகளில் அருகில் உள்ள பூங்காக்களில் விளையாட விடுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இதனால் கெட்ட கொழுப்புகள் வியர்வை வழியாக வெளியேறி, இதயம் துடிப்பு சீராகும்.
37
நடனம் ஆடுதல்
நடனம் ஆடுவது கலை மட்டுமல்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைகிறது. பெற்றோர்கள் எளிதான நடன அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து ஆட வைக்கலாம். இது உடல் நிலைக்கு மட்டுமின்றி மனநிலைக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. மேலை நாடுகளில் டிவியில் மெலிதான பாடல்களை ஒலிக்க விட்டு எளிதான அசைவுகள் மூலம் நடனம் ஆடுவதை உடற்பயிற்சியாக செய்கின்றனர். தற்போது உடற்பயிற்சி கூடங்களிலும் ஜும்பா என்ற ஒரு வகை நடனம் உடற்பயிற்சியாக வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்ற மற்றொரு பயிற்சி சிலம்பம் சுற்றுதல். இது தற்காப்பு கலைகளுள் ஒன்றாகும். இதை தினமும் செய்வதால் குழந்தைகள் சுறுசுறுப்பாக உணர்வர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் சிலம்பாட்டம் உதவி புரியும். உங்கள் வீடுகளுக்கு அருகில் சிலம்பம் கற்றுத்தரும் பள்ளிகள் இருந்தால் குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது சிலம்பம் சுற்றக் கற்றுக் கொடுங்கள்.
57
யோகாசனம்
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்கிற ஒரு பழமொழி உண்டு. சிறுவயதிலிருந்தே நாம் பழகும் பழக்கம் நாம் சாகும் வரை அப்படியே இருக்கும் என்பது தான் அதன் பொருள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கத்தை கற்றுக் கொடுக்க விரும்பினால் யோகா செய்ய கற்றுக் கொடுங்கள். தினமும் 20 நிமிடங்களாவது யோகா செய்ய வேண்டும். பிரணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை செய்வது சிறப்பானது. யோகா செய்வதால் குழந்தைகளின் மனம், சிந்தனைகள் ஒருநிலைப்படுகிறது. படிப்பிலும் அதிக கவனம் செலுத்த உதவி புரிகிறது.
67
வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துதல்
வீடுகளில் இருக்கும் சிறு பணிகளை செய்ய குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். துடைத்தல், வீடுகளை சுத்தம் செய்தல், வீட்டை கழுவுதல், தோட்டம் அமைத்தல், தோட்டத்தை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக அவர்களை சுறுசுறுப்பாக வைக்க முடியும். அதேபோல் வீட்டில் களைந்து கிடக்கும் பொருட்களை அழகாக அடுக்கி வைக்கவும் சொல்லிக் கொடுக்கலாம். இது அவர்களின் ஒழுக்கத்தை மேலும் மேம்படுத்தும்.
77
ஸ்க்ப்பிங் பயிற்சி
குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைக்க முடியாதவர்கள், பெரிய அளவில் ஈடுபாடு காட்டாத குழந்தைகளை குறைந்தபட்சம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு வைத்து குதிக்கும் விளையாட்டையாவது விளையாடப் பழக்குங்கள். இது அவர்களின் பாதங்களை சீராக வைக்கும். உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவும். உடல் எடை அதிகரிக்காமல், தசைகள் வலிமையாக இருப்பதற்கும் இந்த பயிற்சி முறை உதவி புரிகிறது.