
தொண்டை புண் என்பது அனைத்து வயதில் இருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான விஷயமாகும். ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இருப்போம். இதனால் பேசுவது சாப்பிடுவது தூங்குவது கடினமாகிவிடும். சமயங்களில் தொண்டைப்புண் உள்ளவர்களால் எச்சில் கூட விளங்க முடிவதில்லை. சொல்லப் போனால் இது நம்முடைய தினசரி வாழ்க்கையை கெடுத்து விடும்.
தொண்டை புண் வருவதற்கு பல காரணங்கள் சொல்லலாம். அதாவது வைரஸ் தொற்றுகள், பாக்டீரியாக்கள், அலர்ஜி அல்லது அதிகமாக பேசுவது என போன்றவற்றால் கூட ஏற்படலாம். பொதுவாக தொண்டைப் பொன் தானாக குணமாகிவிடும். இருந்தபோதிலும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அவற்றின் வலியையும், குணமாக்கும் நேரத்தையும் குறைக்கலாம். எனவே இன்றைய பதிவில் தொண்டைப்புண் விரைவில் குணமாக உதவும் எளிய வழிமுறைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
தொண்டைப்புண் விரைவில் குணமாக சிம்பிள் டிப்ஸ்:
1. தொண்டை புண்ணை சரி செய்ய மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான் உப்பு நீர். ஆம், உண்மையில் இந்த நீர் தொண்டையில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பு கலந்து அந்த நீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே விரைவில் தொண்டைப்புண் குணமாகும்.
2. நீங்கள் தொண்டை புண்ணால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதனால் ஏற்படும் வறட்சியை போக்கவும் வலியை குறைக்கவும் சூடான பானங்களை தொடர்ந்து குடித்து வரவும். இதற்கு நீங்கள் சூடான நீர் மூலிகை டீ சூடான பால் போன்றவற்றை குடித்து வரலாம். வேண்டுமானால் நீங்கள் இவற்றில் தேன் கூட கலந்து குடிக்கலாம். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. வீட்டில் ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் தொண்டை வறட்சி ஆகாமல் தடுக்கப்படும். மேலும் இதனால் தொண்டை புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் ஷீயூமிடிபயர் பயன்படுத்துங்கள். இல்லையெனில், ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அறையில் வைக்க வேண்டும்.
4. தொண்டைப்புண் குணமாகும் வரை நீங்கள் எந்த ஒரு காரமான உணவுகளை சாப்பிடவே கூடாது. அது போல உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். வேண்டுமானால் நீங்கள் தயிர், ஜூஸ், சூப் போன்றவற்றை சாப்பிடலாம்.
தொண்டைப்புண் குணமாக இஞ்சி & தேன் நன்மைகள்:
இஞ்சியில் வீக்கத்தை தடுக்கும் பண்புகள் உள்ளது. எனவே இது துண்டை புண்ணை குணப்படுத்த நிச்சயம் உதவும். இதற்கு நீங்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடிக்கலாம்.
அதுபோல தேனில் பாக்டீரியாக்களை கொள்ளும் பண்புகள் உள்ளதால் இதுவும் தொண்டை புண்ணை குணப்படுத்தும் இதற்கு நீங்கள் சூடான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம் அல்லது துளசி இலையை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.
இதையும் படிங்க: தொண்டையில் தொற்று ஏற்பட்டால் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!
முக்கிய குறிப்பு:
தொண்டைப்புண் குணமாக உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தொண்டை புண் விரைவில் குணமாகும்.
மேலே சொன்ன வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் தொண்டை புண் விரைவில் குணமாகும். ஒருவேளை அவற்றை முயற்சி செய்தும் தொண்டைப்புண் குணமாகவில்லை என்றால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
இதையும் படிங்க: சளி, தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் இதோ..