நம் ஒவ்வொருவரும் காலை எழுந்தவுடன் டூத் பேஸ்ட் கொண்டு பற்களை துலக்குவோம். டூத் பேஸ் பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து பற்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும், ஈறுகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
25
Toothpaste Cleaning Hacks In Tamil
ஆனால் உண்மையில், டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்குவது மட்டுமின்றி பல பொருட்களில் உள்ள கறைகளையும் மிக எளிதாக அகற்ற உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், நாம் பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட் கொண்டு பல பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். அப்படி டூத் பேஸ்ட்டை கொண்டு எந்தெந்த பொருட்களில் உள்ள கறைகளை அகற்றலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
உங்கள் ஆடையில் மஞ்சள் காரை படித்திருந்தால் அவற்றை நீக்க நீங்கள் டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு கறை உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுவினால் கறைகள் மறைந்துவிடும்.
சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்
உங்கள் வீட்டில் இருக்கும் சில்வர் பாத்திரத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அதை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை தேவையற்ற பிரஷில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை பாத்திரத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு எப்போதும் போல தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பாத்திரம் புத்தம் புதியதாக இருக்கும்.
45
Toothpaste Cleaning Hacks In Tamil
வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள் சீக்கிரமாகவே அதன் பொலிவை இழந்துவிடும். மேலும் கறைகள் படிந்து விடும். எனவே கறைகள் படிந்த வெள்ளி நகைகளை டூத் பேஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். அதற்கு நகைகளின் மீது டூத் பேஸ்ட் தடவி பிரஷ் மூலம் மெதுவாக தேய்த்தபின் கழுவுங்கள். உங்கள் நகைகள் புத்தம் புதியதாக பிரகாசிக்கும்.
வெள்ளை காலணி அல்லது ஷீவில் இருக்கும் கறைகள்
உங்களது வெள்ளை காலணி அல்லது ஷீவில் அழுக்கு மற்றும் கறை இருந்தால் அவற்றை நீக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். மேலும் இது ஒரு கிளீனர் போல நன்கு சுத்தம் செய்யும். இதற்கு உங்களது வெள்ளை காலணி அல்லது ஷீக்களில் இருக்கும் கடைகள் மீது டூத் பேஸ் தடவி அவற்றை ஒரு பிரஷ் மூலம் மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.
55
Toothpaste Cleaning Hacks In Tamil
துருப்பிடித்த பைப்
உங்கள் வீட்டுப் பை துருப்பிடித்து இருந்தால் அதை சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை பைப் மீது தடவி பத்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால் உங்களது பல் புத்தம் புதியது போல் பிரகாசிக்கும்.