டூத் பேஸ்ட் வாங்க போறீங்களா..? ப்ளீஸ்.. 'கலர் மார்க்' பாத்து வாங்குங்க ஏன் தெரியுமா..?
நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்த பிறகு அவற்றை பயன்படுத்துங்கள். இல்லையெனில், பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.

பொதுவாக நாம் பற்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்துவோம். இருந்தபோதிலும் நம் பற்கள் அல்லது ஈறுகளில் சில சமயங்களில் பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு காரணம் தவறான டூத் பேஸ்ட் தான்.
உண்மையில், நாம் விளம்பரத்தின் அடிப்படையில் டூத் பேஸ்ட்டை வாங்கும் போது அது நம் பற்களை பாதிக்கிறது. உங்களுக்கு தெரியுமா.. ஒவ்வொரு நிறுவனமும் அதன் ஒவ்வொரு தயாரிப்பு பற்றி தகவலையும் வழங்குகிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், டூத் பேஸ்ட் ட்யூப்பில் கொடுக்கப்பட்டுள்ள கலர் மார்க் மூலம் உங்களுக்கு எந்த டூத் பேஸ்ட் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். டூத் பேஸ்ட் பற்றிய இந்த தகவல்கள் நான்கு வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, டூத் பேஸ்ட் உள்ள கலர் மார்க் எதைக் குறிக்கின்றன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு நிறம்: இந்த நிற கலர் மார்க் இருக்கும் டூத் பேஸ்டில் ரசாயனத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் இதை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில், இது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
நீல நிறம்: இந்த நிற கலர் மார்க் இருக்கும் டூத் பேஸ்ட் இயற்கையானது மற்றும் ரசாயனங்களும் உள்ளது. மேலும் இந்த வகை டூத் பேஸ்ட் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே ஏதேனும் பல் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இந்த நிற பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: உங்களுக்குத் தெரியுமா? டூத் பேஸ்ட் கொண்டு முகப்பருவை சரி செய்யலாம்...
சிவப்பு நிறம்: இந்த நிற கலர் மார்க் இருக்கும் டூத் பேஸ்ட்டில் ரசாயனங்களுடன் இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது கருப்பு குறியுடன் கூடிய டூத் பேஸ்ட் விட சற்று பாதுகாப்பானது.
இதையும் படிங்க: டூத் பேஸ்ட் பற்களுக்கு மட்டுமல்ல.. இவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் தெரியுமா?
பச்சை நிறம்: இந்த நிற கலர் மார்க் இருக்கும் டூத் பேஸ்ட் முற்றிலும் பாதுகாப்பானது. ஏனெனில் இது முற்றிலும் பொருட்களால் ஆனது. இது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பாதுகாப்பாக கருதப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்ச ரசாயனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D