Published : Nov 08, 2024, 10:35 AM ISTUpdated : Nov 08, 2024, 10:59 AM IST
Cutting Onions And Tears : வெங்காயத்தை நாம் வெட்டும்போது கண்களில் இருந்து கண்ணீர் வடியும். ஆனால் அது ஏன் அப்படி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?தெரியவில்லை என்றால் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே எல்லார் வீட்டு சமையல் அறையிலும் எது இருக்கிறதோ இல்லையோ வெங்காயம் கண்டிப்பாக இருக்கும். வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு சமையலும் முழுமை அடையாது. பலர் பச்சையாகவே வெங்காயத்தை சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ சாலட்டுகளில் கலந்து சாப்பிட விரும்புவார்கள். வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நாம் ஏற்கனவே அறிந்ததே.
25
Cutting Onions And Tears In Tamil
ஆனால், வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கும். அதுமட்டுமின்றி இது கண் எரிச்சலையும் ஏற்படுகிறது. வெங்காயத்தை நாம் வெட்டும்போது கண்களில் இருந்து கண்ணீர் ஏன் வடிகிறது என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? இதற்கான பதில் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து படியுங்கள்.
வெங்காயம் வெட்டும்போது கண்களில் கண்ணீர் வருவது ஏன்?
உண்மையில் நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை நாம் வெட்டும்போது கண்களில் நீர் வடிவதற்கு ஒரு ரசாயனம் தான் காரணம். ஆம், வெங்காயத்தில் இருக்கும் சின்-ப்ரோபனேத்தியல்-எஸ்-ஆக்சைடு என்ற வேதிப்பொருள் தான் வெங்காயம் வெட்டும் போது கண்களில் கண்ணீர் வருவதற்கு முக்கிய காரணமாகும். ஏனெனில் இது கண்களின் கண்ணீர் சுரப்பிகளை பாதிக்கிறது இதன் காரணமாக தான் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வடியும். சில சமயங்களில் மங்கலான பார்வை கூட ஏற்படுத்தும். ஆனால் இது தற்காலிகமானது தான். இதனால் கண்களுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது இருப்பினும் நீங்கள் அதிக அளவு வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் உங்கள் கண்களை பாதுகாக்க சிறப்பு கண்ணாடிகளை பயன்படுத்துவது தான் நல்லது. ஏனெனில் நீண்ட நேரம் கண்களில் எரிச்சல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை அனுபவித்தால் கண் மருத்துவர் தான் பார்க்க நேரிடும்.
வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் சிறிது நேரம் அதை குளிரூட்டிய பிறகு அதை வெட்டுங்கள். இப்படி செய்வதன் மூலம் வெங்காயத்திலிருந்து வரும் ரசாயனம் காற்றில் பரவுவது தடுக்கப்படும் மற்றும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீரும் வராது.
அதுபோல நீங்கள் வெங்காயத்தை வெட்டும்போது ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. ஏனெனில் இப்படி செய்வதன் மூலம் வெங்காயத்தில் இருந்து வரும் ரசாயனம் அறையில் அதிகமாக தங்காது, இதனால் உங்கள் கண்களும் எரியாமல் இருக்கும்.