கிராம்பு நறுமண பொருள்களில் ஒன்று. அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் சுவையான மசாலாவில் கிராம்பும் ஒன்று. ஆயுர்வேதத்தில் கிராம்பு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் நிறைய மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன. கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் கார்போஹைட்ரேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிரம்பி காணப்படுகின்றன.
25
Cloves Health Benefits In Tamil
கிராம்பில் உள்ள மருத்துவ பயன்கள் கிடைக்க தினமும் கிராம்பு எடுத்து கொள்ளலாம். அதிலும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கிராம்பினை மென்று தின்றால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். வெறும் வயிற்றில் கிராம்பினை மென்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இங்கு காணலாம்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஒவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எப்பேர்ப்பட்ட தொற்றுநோயையும் தவிர்க்கலாம். தற்போது தொடர்ந்து மாறிவருகின்ற பருவங்களால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. இந்த தொற்றுகளில் இருந்து விலகி இருக்க நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இதை வழக்கமாக செய்து வந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை உணர முடியும்.
கல்லீரல் உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பாகும். கல்லீரல் சேதமானால் உயிருக்கே கூட உலையாகிவிடும். அப்படியான முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க கிராம்பு உதவும். இதனை சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாடு நன்றாக இருக்கும்.
55
Cloves Health Benefits In Tamil
வாய் துர்நாற்றம்:
கிராம்பு நறுமண பொருள் என்பதால் நம்முடைய வாய் சுகாதாரத்திற்கு உதவும். நமது வாய்க்கு இயற்கையான நறுமணமூட்டி போல செயல்படும். வாய் புத்துணர்ச்சியாக இருக்க உதவும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் வாய் துர்நாற்றம் வரும். இதனை தவிர்க்க கிராம்பு சாப்பிடலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள மோசமான நுண்ணுயிர் தாக்குதலை சமாளிக்கும். நாள்தோறும் காலையில் கிராம்பினை மென்று சாப்பிட்டால், வாயில் காணப்படும் கிருமிகளை ஒழிக்கலாம். புத்துணர்வாக உணர்வீர்கள்.
பல் வலி:
பல் வலிக்கு கிராம்புகள் சிறந்த நிவாரணியாக செயல்படும். திடீரென ஏற்படும் பல்வலிக்கு மருந்து மாத்திரையை நீங்கள் விரும்பாவிட்டால், கவலையே வேண்டாம். கிராம்புகள் உங்களுக்கு கை கொடுக்கும். கிராம்பினை வலி இருக்கும் பல்லில் வைத்து அழுத்துங்கள். இதனால் பல்லில் உள்ள பாக்டீரியாவை மீது தாக்கம் ஏற்படுகிறது. இதுவே பல்வலியை குணப்படுத்த உதவுகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.