நம்மில் பலர் அடர்த்தியான, நீண்ட கூந்தலை விரும்புகிறோம். இதற்காக பலவிதமான எண்ணெய்கள், ஷாம்புகளை முடிக்குப் பயன்படுத்துகிறோம். ஆனாலும் கொஞ்சமும் பலன் இல்லை. உண்மையில், நமது முடி எப்படி இருக்கிறது என்பது மரபணுக்களைப் பொறுத்தது. அதாவது, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், உங்களுக்கும் அது நடக்கும்.
மரபணுக்கள் மட்டுமல்ல, வேலை அழுத்தம், உடல்நலப் பிரச்சினைகள், மாசுபாடு, முடி பராமரிப்பு சரியாக இல்லாதது போன்ற பல காரணங்களால் முடி உதிர்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நமது அன்றாட உணவில் சில சூப்பர் உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் முடி நன்கு வளரும். மேலும் முடி முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும். எதை சாப்பிட்டால் முடி வலுவாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.