பயன்படுத்தும் முறை
ஒரு அரை கப் வழியில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு பச்சை கற்பூரத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் சேர்க்கவும். மேலும் அதில் வசம்பு பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அவை தண்ணீரில் கரையும் வரை நன்றாக கலக்கவும்.
அவை நன்றாக கரைந்த பிறகு அந்த தண்ணீரால் உங்கள் வீட்டு தரையை துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் தரை சுத்தமாக இருப்பது மட்டுமின்றி, வீட்டில் எறும்புகள், ஈக்கள் மற்றும் சின்ன சின்ன பூச்சிகளின் தொல்லை இருக்கவே இருக்காது.
உங்களுக்கு வேண்டுமானால் இந்த தண்ணீருடன் நீங்கள் டெட்டால் அல்லது லைசால் சேர்த்துக் கொள்ளலாம்.
அதுபோல இந்த தண்ணீரால் உங்கள் வீட்டின் சமையலறையின் மேடையை சுத்தம் செய்தால் அங்கும் ஈக்கள் மற்றும் எறும்புகளின் தொல்லை இருக்கவே இருக்காது.