எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் 'எதை' செய்யக் கூடாது தெரியுமா?  சூட்டை கிளப்பிடும்!!

Published : Nov 07, 2024, 10:35 AM ISTUpdated : Nov 07, 2024, 10:41 AM IST

Oil Bath : தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அந்நாளில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.  

PREV
15
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் 'எதை' செய்யக் கூடாது தெரியுமா?  சூட்டை கிளப்பிடும்!!
Oil Bath Benefits In Tamil

இருக்கும் பாட்டி அடிக்கடி சொல்லுவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எண்ணெய் தேய்த்து குளிப்பது அவ்வளவு நன்மையை என்று நீங்கள் கேட்டால் அதுதான் உண்மை.

ஆம், நம்முடைய பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் கூட எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சித்த மருத்துவத்தில் கூட, தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியுமா..எண்ணெய் குளியல் மூலம் சரும பிரச்சனைகள் அனைத்தையும் சுலபமாக தடுக்க முடியும்.

25
Oil Bath Benefits In Tamil

எண்ணெய் குளியல் நன்மைகள்:

எண்ணெய் குளியல் உடல் சூட்டை தணிக்கும், ஆழ்ந்த உறக்கத்தை தரும், உடல் வலியைக் போக்கும், சருமம் மற்றும் தலைமுடிக்கு பொலிவைத் தரும். அதுபோல உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் கூட மூட்டுகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளித்தால் ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க:  உங்களுக்குத் தெரியுமா? எண்ணெய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கி இளநரை வரவே வராது...

35
Oil Bath Benefits In Tamil

எண்ணெய் குளியல் யாருக்கு நல்லதல்ல:

கர்ப்பிணி பெண்கள், தீவிர நோயால் அவதிப்படுபவர்கள், உடலில் காயங்கள் ஏதேனும் இருந்தால், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், உடலில் அதிக வலி உள்ளவர்கள், கபம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் ஆகியோர் எண்ணெய் குளியல் தவிர்ப்பது நல்லது. அதுபோல, பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை முதல் மற்ற அனைவருக்கும் எண்ணெய் குளியல் நல்லது.

இதையும் படிங்க:  எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாள் எது? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

45
Oil Bath Benefits In Tamil

எண்ணெய் குளியல் போது செய்யகூடாத விஷயங்கள்: 

1. எண்ணெய் குளியலுக்கு குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். 
மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அதுபோல, குளித்து முடித்த பிறகு தலையை நன்கு காய வைத்து விடுங்கள்.

2. அந்நாள் முழுவதும் அதிக காற்றோட்டமான இடங்களில் இருப்பதே தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக காற்றில்  இருக்கும்போது குளிர் காற்றுப்பட்டு சளி பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோலவே, அதிக வெயிலிலும் இருக்க வேண்டாம் இல்லையெனில், உஷ்ணத்தால் உடல் சூடு அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும்.

3. அந்நாள் முழுவதும் பகலில் தூங்க வேண்டாம். ஏனெனில் உடலில் இருக்கும் நவதுவாரங்களின் வழியாக தான் உஷ்ணம் வெளியேறும். நவதுவாரங்களில் ஒன்றுதான் நம்முடைய கண்கள். எனவே எண்ணைக்குளியல் அன்று பகலில் தூங்குவது தவிர்ப்பது நல்லது.

55
Oil Bath Benefits In Tamil

4. எண்ணெய் குளியல் அன்று நீங்கள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், மாவு பொருட்கள், மாங்காய், பூசணிக்காய், தேங்காய், எள், உளுந்து, கொள்ளு, அரைக்கீரை, அகத்திக்கீரை, கத்தரிக்காய், மொச்சை, கொத்தவரங்காய், நண்டு, மீன், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். வேண்டுமானால் நீங்கள் நெய், மிளகு ரசம் மற்றும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்

நினைவில் கொள் : 

எண்ணெய் குளியல் குளிக்கும் நாளில் காலை 5-7 மணிக்குள் என்னை குளியல் செய்திருக்க வேண்டும். அதுபோல, தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளித்திருக்க வேண்டும்.

எண்ணெய் குளியலின் முழு பலன்களை நீங்கள் பெற விரும்பினால் மேலே சொன்ன விஷயங்களை பின்பற்ற மறக்காதீர்கள்.!

Read more Photos on
click me!

Recommended Stories