Chanakya Niti: இந்த 4 இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! முழு விவரம்!

Published : Sep 14, 2026, 05:14 PM IST

Chanakya Niti: ஒரு வார்த்தை ஒருவரின் மனதை வெல்லவும் செய்யும். ஆறாத காயத்தையும் உருவாக்கும். ஆகவே எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவது முக்கியம். இந்த 4 இடங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என சாணக்கியர் சொல்கிறார்.

PREV
15
மௌனமாக இருக்க வேண்டிய தருணங்கள்

பேச்சு என்பது மனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய சக்தியாகும். ஆனால், அதே பேச்சை யோசிக்காமல் பயன்படுத்தினால் பிரச்சனைகள், தப்பர்த்தங்கள், உறவுகளில் விரிசல் எனப் பல சிக்கல்கள் உண்டாகும். அதனால்தான் ஆச்சார்ய சாணக்கியர், பேச்சு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சில இடங்களில் நம் கருத்தை உடனே வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, நம்முடைய மரியாதையையும் மன அமைதியையும் ஒருசேரக் காப்பாற்றும்.

25
எதிராளி கோபமாக இருக்கும்போது...

ஒருவர் கோபத்தில் இருக்கும்போது, அவர்களால் சாதாரணமாக யோசிக்க முடியாது. அந்த நேரத்தில் நாம் எவ்வளவு நல்ல விஷயம் சொன்னாலும், அதைத் தவறாகப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. பதிலுக்கு நாமும் கோபப்பட்டால், சின்ன விஷயம் பெரிய சண்டையாக மாறிவிடும். அதனால், எதிராளி கோபமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, நிலைமை சரியானதும் நிதானமாகப் பேசினால் பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.

35
நம் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்தில்...

சிலர் உண்மையைத் தெரிந்துகொள்வதற்காகப் பேசுவதில்லை; வெறும் வாக்குவாதம் செய்வதற்காக மட்டுமே பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவுதான் விளக்கினாலும், அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அங்கு நமது நேரமும் சக்தியும்தான் வீணாகும். எல்லா விவாதங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்பதை விட, சில விவாதங்களிலிருந்து விலகியிருப்பதே புத்திசாலித்தனம்.

45
எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசும்போது...

வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் செய்ய முடிவு செய்தால், அதை உடனே எல்லோரிடமும் சொல்லித் திரிய வேண்டாம். முதலில் அந்த வேலையை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். நம்முடைய இலக்குகளை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டால், தேவையில்லாத விமர்சனங்களும், நம்மை பின்னோக்கி தள்ளும் பேச்சுகளும் வரலாம். அதனால், செய்ய வேண்டியதை அமைதியாகச் செய்து, நம் வெற்றி பேசும்படி செய்வதுதான் புத்திசாலித்தனம்.

55
ரகசியங்கள் காப்பது முக்கியம்
யாராவது நம் மீது நம்பிக்கை வைத்து ஒரு ரகசியத்தைச் சொன்னால், அதை மற்றவர்களிடம் சொல்வது அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம். நமக்குத் தெரிந்த எல்லா விஷயத்தையும் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது புத்திசாலித்தனம் கிடையாது. எந்த விஷயத்தை வெளியே சொல்லலாம், எதை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருப்பவர்களால்தான் நல்ல உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories