Uniform Colors : சீருடைகளின் நிறத்துக்கு பின்னால் இத்தனை காரணங்களா? டாக்டர் முதல் ராணுவம் வரை சுவாரஸ்ய தகவல்கள்!

Published : Sep 14, 2026, 01:01 PM IST

Uniform Colors : மருத்துவர் வெள்ளை, போலீஸ் காக்கி, ராணுவம் பச்சை நிற சீருடை அணிவது ஏன்? ஒவ்வொரு தொழிலின் சீருடை நிறத்துக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
16
சீருடைகளின் நிறத்துக்கு பின்னால் இத்தனை காரணங்களா?

மருத்துவரை பார்த்தவுடன் வெள்ளை கோட்டும், போலீஸாரை பார்த்தவுடன் காக்கி சீருடையும், ராணுவ வீரர்களை பார்த்தவுடன் பச்சை நிற சீருடையும் நம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான சீருடை இருப்பது அவர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காக மட்டுமல்ல. அந்த நிறங்களுக்குப் பின்னால் தூய்மை, பாதுகாப்பு, நம்பிக்கை, அதிகாரம், ஒழுக்கம் மற்றும் நடைமுறைத் தேவைகள் என பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், வெவ்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படும் சீருடை நிறங்களுக்கான காரணங்களைப் பார்க்கலாம்.

மருத்துவர்கள் – வெள்ளை

மருத்துவர்கள் அணியும் வெள்ளை கோட் வெறும் சீருடையாக மட்டுமல்லாமல், தூய்மை, சுகாதாரம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. தனால் மருத்துவரின் தோற்றம் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த உதவுகிறது.

26
போலீஸ் – காக்கி

இந்தியாவில் போலீஸ் சீருடை என்றாலே நினைவுக்கு வருவது காக்கி நிறம். இந்த நிறம் போலீஸ் துறையுடன் நீண்ட காலமாகத் தொடர்புடையதாக இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் காக்கி சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. தூசி, மண் போன்றவை காக்கி நிறத்தில் அதிகமாகத் தெரியாது என்பதால், வெளிப்புறம் மற்றும் களப்பணிகளில் ஈடுபடும் போலீஸாருக்கு இது நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது. இதன் காரணமாக, காலப்போக்கில் காக்கி சீருடை இந்திய போலீஸ் துறையின் தனித்துவமான அடையாளமாகவே நிலைத்துவிட்டது.

36
ராணுவம் – பச்சை மற்றும் கேமஃப்ளாஜ்

ராணுவ வீரர்கள் அணியும் சீருடையில் பச்சை மற்றும் கேமஃப்ளாஜ் (Camouflage) வடிவங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் பசுமையான இயற்கைச் சூழல்களில் வீரர்களின் உடை சுற்றுப்புறத்துடன் கலந்து காணப்படுவதற்கு இந்த நிறங்களும் வடிவங்களும் உதவுகின்றன.

இதன் முக்கிய நோக்கம், எதிரியின் பார்வையில் எளிதில் சிக்காமல் இருப்பது.எனவே, ராணுவ சீருடையின் நிறம் ஒரு அடையாளத்திற்காக மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் போர்க்களத்தில் நடைமுறைத் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

46
விமானிகள் – அடர் நீலம்

விமானிகள் அணியும் சீருடையில் அடர் நீல நிறம் பொதுவாகக் காணப்படுகிறது. இந்த நிறம் ஒழுக்கம், அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக விமானி சீருடை பயணிகளிடம் தொழில்முறை தோற்றத்தையும், ம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

56
சமையல்காரர் – வெள்ளை

சமையல்காரர்கள் அணியும் வெள்ளை நிற சீருடையும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடத்தில் சுத்தம் மிகவும் முக்கியமானது என்பதால், வெள்ளை நிற ஆடையில் அழுக்கு மற்றும் கறைகள் எளிதில் தெரியும். இதனால் சீருடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டிய பொறுப்புணர்வு ஏற்படுகிறது.

மேலும், சமையலறையில் அதிக வெப்பம் நிலவும் சூழலில் வெள்ளை நிற ஆடை வெப்பத்தை அதிகமாக உறிஞ்சாமல் இருப்பதால், மற்ற அடர் நிற ஆடைகளைவிட ஓரளவு வசதியாக இருக்கக்கூடும். இதன் காரணமாகவே சமையலர்களின் பாரம்பரிய சீருடையில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

66
கட்டுமானப் பணியாளர்கள் – மஞ்சள், ஆரஞ்சு

சாலை மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பொதுவாக மஞ்சள் அல்லது ஆரஞ்சு போன்ற பிரகாசமான நிற ஆடைகளை அணிகின்றனர்.

வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் இயங்கும் பகுதிகளில் தொழிலாளர்களை தொலைவில் இருந்தே எளிதாக அடையாளம் காண இந்த நிறங்கள் உதவுகின்றன.

இதனால், சீருடைகளின் நிறங்கள் வெறும் ஆடைத் தேர்வு அல்ல. ஒருவரின் தொழில் அடையாளம், பணியின் தன்மை, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அந்தத் தொழிலுக்கான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகவும் அவை செயல்படுகின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories