Turmeric powder: மஞ்சள் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? உங்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியுமா..?

Published : Jul 24, 2022, 07:03 AM IST

Turmeric powder: அதிகமாக மஞ்சள் உட்கொள்வது யாருக்கு பிரச்சனையை உண்டு பண்ணும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

PREV
15
Turmeric powder: மஞ்சள் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? உங்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியுமா..?
Turmeric powder:

 மஞ்சள் போன்ற ஒரு மசாலா இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும். ஒரு கிருமி நாசினியாக பயன்பட்டு நச்சுக்களை அழிக்கும் என்பது பொதுவாக அனைவருக்குமே தெரியும், தினமும் சிறிதளவு உங்களது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால், அது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை  கரைத்து அழகான உடல் தோற்றத்தை பெற உதவுகிறது.  குறிப்பாக மஞ்சள் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் இரத்த கொழுப்புகளின் அளவைக் குறைக்கும்.

மேலும் படிக்க..Rahu Peyarchi: ராகுவுடன், செவ்வாய் கூட்டணி..சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..நீங்கள் என்ன ராசி..?  

25
Turmeric powder:

அதன் நன்மைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஏனெனில் இது பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேத மருந்துகளாக அறியப்படுகிறது. ஆனால் இதையும் கடந்து தினமும் மஞ்சள் சேர்த்து கொள்வதில் சில தீமைகளும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் மஞ்சளின் நுகர்வு எவ்வாறு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

35
Turmeric powder:

சிறுநீரகக் கற்கள்:

 தினமும் சிறிதளவு உங்களது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது. ஆனால், அதை அதிகமாக உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சலேட்டின் அளவு நம் உடலில் சிறுநீரகக் கற்களை உண்டாக்குகிறது. எனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை குறைந்த அளவிலே உட்கொள்ளவும்.

45
Turmeric powder:

வயிற்றுப்போக்கு:

மஞ்சளில் இருக்கும் குர்குமின்  இரைப்பை குழாய் சரியாக வேலை செய்யாமல் தடுக்கிறது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட தொடங்குகிறது. பெரும்பாலும் வெளி உணவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தாது, ஆனால் அதிகப்படியான மஞ்சள் இந்த சிக்கலை மோசமாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க..தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

55
Turmeric powder:

இரும்புச்சத்து குறைபாடு:

மஞ்சள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுத்து இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம்.மஞ்சள் தேவையான அளவு எடுத்துகொள்ளும் போது இத்தகைய பிரச்சனை உண்டாவதில்லை. பொதுவாக நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால், ரத்தப் பற்றாக்குறை ஏற்பட துவங்கும். ஆனால் மஞ்சளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் இருக்கும் இரும்புச் சத்து உலரத் தொடங்குகிறது, இதன் காரணமாக பலவீனத்துடன், மற்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க..தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

Read more Photos on
click me!

Recommended Stories