
தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிட விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் வெளிப்புற உணவுகளின் பிரியர்களாகவே மாறிவிட்டனர். இதனால் அவர்கள் நினைத்த நேரமெல்லாம் வெளியில் வாங்கி சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலரோ வீட்டை விட்டு வெளியே வந்து தனியே வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போன்றோர் வெளியில் வாங்கி சாப்பிட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
வெளிப்புற உணவுகளில் ருசி மட்டுமே இருக்குமே தவிர, அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் இந்த மாதிரியான உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? ஏனெனில் அவற்றில் நம்முடைய உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் பல மூலங்கள் உள்ளன.
வெளிப்புற உணவுகளை விரும்பி சாப்பிடும் பிரியர்கள் கோடை காலம் மழைக்காலம் என்று பார்க்காமல் எந்த பருவத்திலும் அவர்கள் வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் உங்களுக்கு தெரியுமா.. மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவது நல்லதல்ல.
மழை காலம் ஆரம்பமாகி விட்டதால், இந்த காலகட்டத்தில் ஆபத்தான நோய்கள் மிக எளிதாக பரவ ஆரம்பிக்கும். எனவே இந்த பருவத்தில் ரொம்பவே கவனமாக இருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக இந்த காலகட்டத்தில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே உணவுகளை சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இத்தகைய சூழ்நிலையில் மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிட்டால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கால்களை மோசமாக்கும் பூஞ்சை தொற்று.. மழைக்காலத்தில் 'இப்படி' பண்ணா புண்களே வராது!!
மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குகள் :
1. வயிற்று தொற்று
மழைக்காலத்தில் வயிற்றுத் தொற்றை தவிர்க்க வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் தெருவோர உணவுகளில் சுகாதாரக் கேடுகள் அதிகமாக்ல் இருக்கும். அதாவது சுகாதாரமற்ற நீர் உள்ளிட்டவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கும். அவற்றில் சமைக்கப்படும் உணவுகளில் பாக்டீரியாக்கள் தங்கிவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும்போது பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று வயிற்று தொற்றை ஏற்படுத்தும்.
2. குடிநீர்
மழைக்காலத்தில் தண்ணீரால் கூட நோய் தொற்றுகள் அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் அசுத்தமான நீரை குடிப்பதும், அசுத்தமான நீரில் சமைத்த உணவை சாப்பிடுவது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே வெளிப்புற கடைகளில் கொடுக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் சாதாரண தண்ணீரை கூட சரியாக பராமரிப்பது கிடையாது அதற்கு பதிலாக நீங்கள் மழைக்காலத்தில் சூடான நீரை குடியுங்கள்.
3. கொழுப்பு & கலோரிகள் அதிகம்
தெருவோர உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாகவே. நீங்கள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. இதன் விளைவாக உங்களது உடல் எடை அதிகரிக்கும் மற்றும் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
4. அரைகுறையாக சமைத்த உணவு
வெளிப்புற உணவுகள் அரைகுறியாக சமைக்கப்படுவதால் அது ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் இதன் விளைவாக உங்களது வயிற்றில் பலவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் இந்த நாலுல ஒன்னு குடிங்க.. உடல் நீரேற்றமாக இருக்கும்!
5. இரைப்பை குடல் பிரச்சினை ஏற்படும்
மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இறப்பை குடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இது தவிர வெளிப்புறம் உணவுகள் சுகாதாரமற்றது என்பதால் இதன் விளைவாக உங்களுக்கு வாந்தி வயிற்று வலி காய்ச்சல் குமட்டல் போன்ற பாதிப்பும் ஏற்படும்.
குறிப்பு : மழைக்காலத்தில் முடிந்த அளவிற்கு வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கவும். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நோய் தொற்றுகளில் இருந்து விலகி இருங்கள்