உடன் பிறந்த அண்ணனுக்கு... சகோதரியே மனைவியான சோகம் - 2 குழந்தைகள் பிறந்த பின் தெரியவந்த உண்மை

First Published | Mar 19, 2023, 2:35 PM IST

திருமணமான ஜோடி ஒன்று 6 ஆண்டு இல்லற வாழ்க்கைக்கு பின், தாங்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் என்கிற தகவலை அறிந்து ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

ஒரு மனிதன் DNA டெஸ்ட் எடுத்ததன் மூலம் அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போன ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். ஆண் ஒருவர் பிறந்தவுடனே தத்துக் கொடுக்கப்பட்டதால், அவர் தன் பெற்றோர் யார் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி உள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர், மனைவிக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளது. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் கணவர் இதற்காக உறவினர்களிடம் பேசி உள்ளார். அப்போது டெஸ்ட் எடுத்து பார்த்ததில் உறவினர்களின் சிறுநீரகம் அந்த பெண்ணுக்கு செட் ஆகவில்லை.

இதையும் படியுங்கள்... திருமணம் ஆன முதல் 6 மாசத்துல இப்படி நடக்கலன்னா.. அப்புறம் அந்த கல்யாணமே வேஸ்ட்..!


பின்னர் வேறு வழியின்று தனது மனைவிக்காக தானே சிறுநீரகத்தை ஏன் கொடுக்க கூடாது என அவருக்கு தோன்றி இருக்கிறது. அப்போது அவருக்கு டெஸ்ட் எடுத்து பார்த்தில், இருவரது சிறுநீரகமும் 100 சதவீதம் ஒத்துப்போய் உள்ளது. இதைப்பார்த்து ஷாக் ஆன மருத்துவர்கள், கணவன் - மனைவிக்கு இந்த அளவுக்கு ஒத்துப்போக வாய்ப்பே இல்லையே எனக் கூறி இருவருக்கும் DNA டெஸ்ட் எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது தான் அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் என்கிற உண்மை தெரியவந்துள்ளது. சிறுவயதிலேயே தத்துக் கொடுக்கப்பட்டதால், அந்த பெண் தனது சகோதரி என்றே தெரியாமல், அவரையே திருமணம் செய்துகொண்டு ஆறு ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் அவரது அண்ணன். இப்படி அண்ணன் தன் தங்கையை திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

தங்கையை திருமணம் செய்துகொண்டது தெரிந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நபர் குழப்பத்தில் உள்ளாராம். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி இது தெரிந்து நடந்த தவறு இல்லை என்பதால், இருவரும் அதை புறந்தள்ளிவிட்டு ஜாலியாக சேர்ந்து வாழுமாறும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தூக்கமின்மைக்கு தீர்வுகள்.. AI சொன்ன மேட்டரை கேளுங்க!

Latest Videos

click me!