சிலிண்டர் கசிவு எச்சரிக்கை
சிலிண்டர் வாங்கியதும் அதில் கசிவு இருக்கிறதா? என சோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவை சிலிண்டர் வாங்கி உபயோகம் செய்யும்போதும் சிலிண்டரின் முன் வாய் பகுதியில் தண்ணீர் ஊற்றி பார்க்கவேண்டும். அப்போது திவலைகள் மொட்டு போல வந்தால் கசிவு இருக்கிறது என அர்த்தம். அப்படியேதும் வராவிட்டால் பிரச்சினை இல்லை. சிலிண்டரின் வாய் பகுதி சரியாக இருப்பதை கவனித்து வாங்கி கொள்ளுங்கள்.