RO தண்ணீரை நீண்ட காலம் குடித்தால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை பாதிக்கப்படும் என்று சிலர் பயப்படுகிறார்கள். ஆனால், ஆரோக்கியமான நபர்களுக்கு அத்தகைய ஆபத்து மிகக் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் உடலில் உள்ள சிறுநீரகங்களும் ஹார்மோன்களும் இணைந்து எலக்ட்ரோலைட் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும் பெரும்பாலும் உணவு மூலமே கிடைக்கின்றன. எனவே, சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரைக் குடிப்பதால் பொதுவாக எந்தப் பெரிய பிரச்சனையும் இருக்காது.
மொத்தத்தில், RO தண்ணீர் தாதுக்களை முழுமையாக அகற்றி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து முற்றிலும் சரியானது அல்ல. உண்மையில், நம் உடலுக்குத் தேவையான பெரும்பாலான தாதுக்கள் உணவிலிருந்தே வருகின்றன. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால், நட்ஸ், பருப்பு வகைகள் போன்ற சமச்சீரான உணவை உட்கொண்டால், ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எனவே, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான தண்ணீரைக் குடிப்பதும், நல்ல உணவு உண்பதும், உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை வழங்குவதும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பு: மேலே உள்ள தகவல்கள் அடிப்படைத் தகவல்களுக்காக மட்டுமே. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதே சிறந்தது.