Spinach : கீரையை சமைக்கும் சரியான முறை இதுதான்!! இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க; பலன் இல்லை!

Published : Sep 06, 2025, 03:02 PM ISTUpdated : Sep 06, 2025, 03:03 PM IST

கீரையை சமைக்கும் சரியான முறையும், கீரை சமைக்கும்போது செய்யக் கூடாத தவறுகளையும் இங்கு காணலாம்.

PREV
16

கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்களும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் காணப்படுகிறது. கண்கள், சருமம், எலும்புகள் என உடல் ஆரோக்கியத்திற்கு கீரைகள் மிகவும் நல்லது. ஆனால் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெற, அதனை முறையாக சமைக்க வேண்டும்.

26

கீரையை சமைக்கும்போது சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். அதனை ரொம்ப நேரம் சமைத்தால் நிறம், சுவை மாறுவதோடு ஊட்டச்சத்துக்களும் அப்படியே குறையும். கீரை சமைக்கும்போது அதன் முழுச்சத்துக்களை பெற என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என இங்கு காணலாம்.

36

கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து சமைக்க வேண்டும். ஆனால் கழுவியதும் அந்த தண்ணீரை வடிகட்டாமல் அப்படியே ஈரமாக சமைக்கக் கூடாது. கீரையை கழுவிய பின் தண்ணீரை நன்கு வடிகட்டி பின் சமைக்க வேண்டும். ஈரமான கீரை சமைத்தால் அவை மென்மையாக மாறிவிடும். சில கீரைகள் கரண்டியில் ஒட்டிக்கொள்ளும்.

46

கீரை சமைக்கும்போது உப்பை கடைசியாகவே சேர்க்க வேண்டும். ​​முதலில் உப்பு போட்டால் கீரை மென்மையாகவும், மிருதுவாகவும் மாறிவிடும். சமையலின் இறுதியில் உப்பு போட வேண்டும். கீரையை வதக்கும்போது சிறிதளவு எண்ணெய் விட்டு வதைக்கினால் போதும். இப்படி சமைத்தால் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

56

கீரையை மூடி வைக்காமல் திறந்த நிலையில் தான் சமைக்கவேண்டும். கீரையை எப்போதும் கழுவி தான் நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு கழுவினால் கரையும் வைட்டமின்கள் அப்படியே போய்விடும். கழுவி நறுக்கினால்தான் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

66

இளம் கீரையாக இருந்தால் தண்டுகளைத் தூக்கி போடவேண்டாம். அதை சேர்த்தால் கூட்டுக்கு மொறுமொறுப்பான சுவை கிடைக்கும். கொஞ்சம் முற்றிய கீரை என்றால் அந்த தண்டுகளில் சூப் அல்லது குழம்பு செய்யலாம். சமையலின் முடிவில் அதை சேர்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories