Gold Polish : நாளாக நாளாக, தூசி மற்றும் வியர்வை பட்டு உங்கள் தங்க நகைகளின் பளபளப்பு குறைந்துவிட்டதா? இதை சரிசெய்ய ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டியதில்லை. அல்லது விலை உயர்ந்த கெமிக்கல்களை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
தங்க நகைகள் வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது நம்முடைய உணர்வுகளோடும் நினைவுகளோடும் கலந்தது. திருமண மோதிரமாக இருந்தாலும் சரி, பரம்பரை நகையாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், நாளடைவில் தூசி, வியர்வை, எண்ணெய் மற்றும் பெர்ஃப்யூம் போன்றவற்றால் அதன் பளபளப்பு மங்கிவிடும். உங்கள் நகைகள் மீண்டும் புதுசு போல ஜொலிக்க, கடைகளில் விற்கும் விலை உயர்ந்த கிளீனர்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இதைச் செய்யலாம்.
25
டூத்பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்யுங்கள்
தங்க நகைகளை சுத்தம் செய்ய டூத்பேஸ்ட் ஒரு சுலபமான வழி. கொஞ்சமாக சாதாரண டூத்பேஸ்ட்டை எடுத்து, ஒரு மென்மையான பிரஷ் அல்லது துணியால் நகை மீது மெதுவாகத் தேயுங்கள். சில நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால் போதும். இது நகையில் உள்ள லேசான அழுக்கை நீக்க உதவும்.
35
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்
ஒருவேளை உங்கள் நகைகளில் அதிக அழுக்கு சேர்ந்திருந்தால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை நகை மீது தடவி சில நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பிறகு, மென்மையான பிரஷ் கொண்டு மெதுவாகத் தேய்த்து, தண்ணீரால் கழுவினால், விடாப்பிடியான அழுக்கும் நீங்கிவிடும்.
தங்கச் செயின்களை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரில் சில சொட்டு பாத்திரம் கழுவும் லிக்விட் சோப்பை கலக்குங்கள். அதில் உங்கள் செயினை சில நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான பிரஷ் கொண்டு லேசாகத் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து எடுங்கள்.
நகைகளை சுத்தம் செய்யும்போது ரொம்பவும் வேகமாகவோ, அழுத்தியோ தேய்க்காதீர்கள். அப்படிச் செய்தால் நகைகளில் கீறல்கள் (Scratches) விழ வாய்ப்புள்ளது. உங்கள் நகைகளில் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன் ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சீரான இடைவெளியில் இப்படி சுத்தம் செய்தால், உங்கள் தங்க நகைகள் நீண்ட காலத்திற்குப் புதுசு போல ஜொலிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.