Remembering K Kamaraj: காமராஜர் பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள்.? அவர் கூறிய முத்தான பொன் மொழிகள் என்ன?

First Published Oct 1, 2022, 8:02 AM IST

Remembering K Kamaraj: காமராஜரின் 47-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் காமராஜர் பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள் மற்றும் அவரின் சிறப்பான பொன் மொழிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

Kamarajar

தமிழக முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, அக்டோபர் 2ம்தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  இவர் முதல்வர் மட்டுமின்று, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தூணாக நின்றவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த தலைவர் என்று போற்றப்படுபவர். எளிமையின் சிகரமான இவர் இந்தியாவின் இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதனாலேயே காமராஜர் ''கிங் மேக்கர்' என்றும்  அன்புடன் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க...துணிகளில் விடாபிடி கறை போக , கரப்பான் பூச்சி தொல்லை நீங்க, வீட்டிற்கு உபயோகமான சின்ன சின்ன சமையல் குறிப்புகள்
 

Kamarajar

காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இவர், தன்னுடைய 16 வயதில், காங்கிரஸ்  கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டவர்.

மேலும் படிக்க...துணிகளில் விடாபிடி கறை போக , கரப்பான் பூச்சி தொல்லை நீங்க, வீட்டிற்கு உபயோகமான சின்ன சின்ன சமையல் குறிப்புகள்

Kamarajar

பின்னர், 1919 ஆம் ஆண்டு முதல்  பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். குறிப்பாக, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இவர், தன்னுடைய அரசியல் குருவாக சத்திய மூர்த்தியை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் தன்னுடைய  9 ஆண்டு கால ஆட்சியில் சிகரம் தொட்ட காமராஜர். 

Kamarajar

1953ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர். பாண்டியர், சோழர்களின் காலத்தில் இருந்ததை விட, இவரின் ஆட்சி காலத்தில் தமிழகம் தன் பொற்காலத்தை கண்டது. தமிழகத்தில் முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை துவங்கி வைத்தார். கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி பள்ளி செல்லாத ஏழை எளிய குழந்தைகளின் வாழ்வில் கலங்கரை விளக்கேற்றினார்.

Kamarajar

அதுமட்டுமின்று, தமிழ்நாட்டில் ஏராளமான அணைகளையும், பாலங்களையும் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தமிழக கிராமங்கள் பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது  காமராஜரின் ஆட்சியில் தான். இப்படி, தன்னுடைய வாழ்நாளை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.  

Kamarajar

காமராஜர் தனது வாழ்நாளில் சில பொன்மொழிகளை நமக்காக விட்டு சென்றுள்ளார். அவை என்ன என்பதை கீழே காணலாம்.

''உன் பிள்ளையை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. ஆனால், சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே''

''ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்''

 ''எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை''

''சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் கிடைத்தாலே போதுமானது''.

மேலும் படிக்க...துணிகளில் விடாபிடி கறை போக , கரப்பான் பூச்சி தொல்லை நீங்க, வீட்டிற்கு உபயோகமான சின்ன சின்ன சமையல் குறிப்புகள்

kamaraj

கடைசி வரை ஏழையாக வாழ்ந்தவர்:

காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட பெருந்தலைவர் கர்மவீரர் காந்தியின் பிறந்த தினமான 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மறைந்தார். இதில், இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், காமராஜர் மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வாடகை வீட்டில் வசித்த இவருக்கு வங்கிக் கணக்கோ, சொத்தோ இல்லையாம். அதனால், தான் இன்றும் மக்கள் மனதில் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக காமராஜர் இருக்கிறார். அதுமட்டுமின்றி இவரது, மறைவுக்கு பின் இவரின் ஒப்பற்ற சேவைகளை பாராட்டி, 1976ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

click me!