வீட்டில் ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவை தான்!! எப்படி தடுக்கணும் தெரியுமா?

First Published Jun 7, 2023, 12:00 PM IST

உங்கள் வீட்டு ஏசியில் திடீரென தீப்பிடிப்பதைத் தடுப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள்... 

கோடைகால தகிக்கும் வெப்பத்தை கட்டுபாட்டுக்குள் வைக்க அல்லது குளிர்ந்த இதமான உணர்வை அனுபவிக்க நாம் ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறோம். இவை சில நேரங்களில் தீப்பிடித்து எரிகின்றன. பேரழிவை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஏர் கண்டிஷனர் தீப்பிடிப்பது சிறிய தவறுகளிலிருந்து தான் நடக்கிறது. அவற்றின் பொதுவான காரணங்களை இங்கு காணலாம். 

ஏசி தீ விபத்துகளுக்கு ஒரு பொதுவான காரணம் முறையாக சர்வீஸ் செய்யப்படாதது தான். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். சரியான பராமரிப்பு இல்லாமல் போனால், ​​அதன் உட்பகுதியில் தூசி குவிந்து, அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால் அங்கு தீ பிடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. 

ஏசியில் புதிதாக மாற்றும் பொருள்களை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். போலியான அல்லது தவறான பாகங்களின் பயன்பாடு விபத்துக்களுக்கு வழிவகுக்கும். இது ஏசியை கொஞ்சம் கொஞ்சமாக சேதமாக்கும். இதன் விளைவாக இறுதியில் தீப்பிடிக்கும். 

தீ அபாயத்தை அதிகரிக்கும் மற்றொரு காரணி ஏசிக்கு அருகாமையில் எரியக்கூடிய பொருட்கள் இருப்பது. காகிதம், இலைகள் மற்றும் குப்பைகள், ஏசிக்கு அருகில் இருக்கும் போது, ​​அதன் பின் பக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் காற்றின் காரணமாக தீப்பிடிக்கும். 

ஏர் கண்டிஷனரை போதுமான அளவில் சுத்தம் செய்யத் தவறினால், அதன் காற்று துவாரங்கள், வடிகட்டிகள், சுருள்கள், துடுப்புகளில் அழுக்கு மற்றும் தூசி, துகள்கள் குவிவதற்கு வழிவகுக்கிறது. இந்த தடைகள் சாதாரண காற்றோட்டத்தைத் தடுக்கிறது. இதனால் ஏசி செயலிழந்து, கடைசியில் தீப்பிடிக்கும். ஏர் கண்டிஷனர்களில் விலை மலிவான போலி பாகங்களைப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிங்க: வீட்டின் இந்த திசைல மட்டும் பீரோவை வைக்காதீங்க! காசு காத்தா கரையும்.. பணம் பெருக பீரோ எங்க வைக்கணும் தெரியுமா?

ஏசிய தீப்பற்றினால் என்ன செய்ய வேண்டும்? 

ஏர் கண்டிஷனர்களில் உயர்தர பாகங்களைப் பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, ஸ்பிலிட் ஏசியின் தரநிலைகளை கவனிக்க வேண்டும். ஏசியின் ஆயுட்காலம், பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கமான சர்வீஸ் மிகவும் முக்கியமானது.

தரமான பொருள்களின் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், ஏர் கண்டிஷனரை தொடர்ந்து பராமரிப்பதன் மூலமும், தீ விபத்து ஆபத்துகளை குறைக்கலாம். உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கலாம். 

இதையும் படிங்க: மாரடைப்பு வரப்போவதை கண்களை பார்த்தே கண்டுபிடிக்கலாம்.. இதோ 5 முக்கிய அறிகுறிகள்..!

click me!