சாப்பிட்ட உடனே காபி, டீ குடிக்கிறீங்களா? ஆனா உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

First Published | Sep 18, 2024, 2:50 PM IST

உணவு சாப்பிட்ட பிறகு காபி, டீ சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் சாப்பிட்ட உடன் காபி, டீ குடிப்பதால் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Drinking Coffee Tea After Meal

நம்மில் பலரும் காலையில் காபி அல்லது டீ உடன் தான் நமது நாளை தொடங்குகிறோம். டீயும் காபியும் நம் நாளுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கினாலும், பலர் தங்கள் உணவுக்கு முன் அல்லது பின் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உணவு சாப்பிட்ட பின் காபி அருந்துவது உங்கள் உடல் காஃபினுக்கு எதிர்வினையாற்றுவதை பாதிக்கும்.

இது நம் உடல் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சும் விதத்தையும் பாதிக்கலாம். சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது உணவுக்கு முன்னும் பின்னும் காபி மற்றும் டீ குடிக்கக்கூடாது என்பதை பரிந்துரைக்கிறது. 

உணவுக்கு முன்னும் பின்னும் ஏன் டீ மற்றும் காபி சாப்பிடக்கூடாது?

உணவுக்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேர இடைவெளியில் டீ மற்றும் காபியை  குடிக்கக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் அதிகப்படியான நுகர்வு, நரம்பு மண்டலத்தைத் தூண்டி உடலியல் சார்ந்து விளைவிக்கலாம். நம் உடல் இரும்பை உறிஞ்சும் விதத்தையும் பாதிக்கலாம் என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 

Drinking Coffee Tea After Meal

தேநீர் மற்றும் காபி இரண்டிலும் டானின்கள், இரும்பை வயிற்றில் பிணைக்கக்கூடிய கலவைகள் உள்ளன. எனவே, உணவுக்கு மிக அருகில் டீ மற்றும் காபி இல்லாதபோது, நம் உடலுக்கு இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்சுவதற்கு வாய்ப்பளிக்கிறோம். இதன் மூலம் இரத்த சோகை போன்ற நிலைகளைத் தடுக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு டீ, காபி குடிக்க வேண்டும்?

தேநீர் மற்றும் காபிக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் காஃபின் ஆகும். 150 மில்லி கப் காபியில் 80-120mg காஃபின் உள்ளது, அதே சமயம் இன்ஸ்டெண்ட் காபியில் 50-60 mg காஃபின் உள்ளது. தேநீரைப் பொறுத்தவரை, ஒரு கப் டீயில் 30 முதல் 65 மில்லிகிராம் காஃபின் உள்ளது. நீங்கள் காபி அல்லது டீ குடிக்கும் போது இந்த புள்ளிவிவரங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

Tap to resize

Drinking Coffee Tea After Meal

பக்க விளைவுகள்

காஃபின் ஒரு இயற்கையான தூண்டுதல் ஆகும். இது தேநீர், காபி, சாக்லேட், ஆற்றல் பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.. காஃபினின் மிதமான நுகர்வு உங்களை அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவடதுடன் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மூளையை அதிகமாகத் தூண்டுவது முதல் தூக்கமின்மை மற்றும் செரிமானப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் வரை, அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

தேநீர் மற்றும் காபி சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான வழி எது?

தேநீர் மற்றும் காபியில் டானின்கள் உள்ளன மற்றும் இவை அமிலத்தன்மை கொண்டவை. அசிடிட்டி போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி  குடிக்கும் போது அவர்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை அதிகரிக்கலாம். காபியின் கசப்பும் வயிற்றில் அமிலத்தை வெளியிட தூண்டும். இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Drinking Coffee Tea After Meal

காபி மற்றும் தேநீர் இரண்டிலும் கணிசமான அளவு காஃபின் உள்ளது, மேலும் தூங்க செல்வதற்கு முன்பு, அதை குடிப்பது  உங்கள் தூக்க முறைக்கு இடையூறு விளைவிக்கும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன் காஃபின் உட்கொள்ளக்கூடாது. காஃபின் உள்ளடக்கத்தை மனதில் வைத்து, பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் காஃபின் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு நாளில் 400 மில்லிகிராம் காஃபினை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது நான்கு முதல் ஐந்து கப் தேநீர் அல்லது காபி அருந்தலாம். இருப்பினும், உங்கள் உடல் காஃபினுக்கு எவ்வளவு உணர்திறன் கொண்டது என்பதைப் பொறுத்தது. மேலும், நீங்கள் சில அடிப்படை உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்கள் மருத்துவரை ஆலோசனைப்படி காபி, டீ குடிப்பது நல்லது..

Drinking Coffee Tea After Meal

பால் சேர்க்கப்பட்ட தேநீருக்கு பதில் பிளாக் டீ குடிப்பது நல்லது. இதில் இதய நோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல், இரத்த ஓட்டம் மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கறுப்பு காபி குறைந்த கலோரிகள், அத்துடன் மன விழிப்புணர்வு மற்றும் தெளிவை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது. இருப்பினும், இவற்றையும் மிதமான அளவில் குடிப்பது நல்லது.

டீ மற்றும் காபி குடிப்பது சோர்வு மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் அதே வேளையில், இந்த பானங்களை சரியான நேரத்தில், சரியான அளவு மற்றும் சரியான முறையில் குடிப்பது முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

Latest Videos

click me!