கருப்பு மிளகு கிச்சனில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் ஒரு முக்கியமான மசாலா பொருள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
26
How To Check Purity Of Black Pepper
இதை "கருப்பு தங்கம்" என்று அழைப்பர். காரணம் இதன் விலை அவ்வளவு அதிகம். இப்படியிருக்கையில் நாம் வாங்கும் மிளகு ஒரிஜினலா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் பப்பாளியின் விதையை வெயிலில் காய வைத்து பிறகு மிளகில் சேர்ப்பார்கள். இதனால் ஒரிஜினல் மிளகிற்கும் பப்பாளி விதைக்கும் வித்தியாசமே தெரியாது. விவரம் தெரிந்தவர்களால் மட்டுமே அதை சரியாக கண்டுபிடிக்க முடியும். சரி இப்போது இந்த பதிவில் ஒரிஜினல் கருப்பு மிளகை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
36
வாட்டர் டெஸ்ட்
நீங்கள் வாங்கும் கருப்பு மிளகு ஒரிஜினலா என்பதை கண்டுபிடிப்பதற்கு முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு தண்ணீரில் மிதந்தால் அது ஒரிஜினல். ஏனெனில் ஒரிஜினல் மிளகில் அடர்த்தி அதிகமாக இருக்கும். பப்பாளி விதையானது தண்ணீரில் மூழ்கி விடும்.
பொதுவாக பப்பாளி விதைக்கு வாசனையை ஏதுமில்லை. ஒருவித கசப்பு வாசனை மட்டுமே வரும். ஆனால் ஒரிஜினல் மிளகில் தனித்துவமான வாசனை இருக்கும். எனவே மிளகை உள்ளங்கையில் வைத்து உள்ளங்கையை லேசாக கசக்கி அதை முகர்ந்து பார்க்கவும். நல்ல காரமான வாசனை வந்தால் அது ஒரிஜினல் மிளகு. வாசனை ஏதும் இல்லாமல் கசப்பு வாசனை மட்டும் வந்தால் அது பப்பாளி விதை.
56
நிறம் :
ஒரிஜினல் மிளகின் தோல் நல்ல கருப்பு நிறத்தில் சுருக்கங்களாக இருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட மிளகின் தோலானது கருப்பு வெளி நிறத்தில் இருக்கும். எனவே நீங்கள் வாங்கும் போது நன்கு உற்றுப் பார்த்து வாங்குங்கள்.
66
போலி மிளகாய் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் :
போலி மிளகாய் சமையலுக்கு பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்பு, தடுப்புகள், சருமம் சிவந்து போகுதல் போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர வயிற்று கோளாறு, குடல் புண் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரிச்சல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி இனி நீங்கள் கருப்பு மிளகு வாங்கும் போது ஒரு முறை பரிசோதித்து வாங்குவது நல்லது.