பொதுவாக குழந்தைகளின் சருமம் ரொம்பவே மென்மையாக இருக்கும். இதனால் குளிர்காலத்தில் அவர்களது தோல் ரொம்பவே வறண்டு, ஈதப்பதம் குறைந்து, உலர்ந்ததாக மாறிவிடும். இப்படி இருந்தால் தோலில் அரிப்பு, எரிச்சல் போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகள் குழந்தைகளுக்கு உண்டாகும். இந்த பிரச்சினைகள் வருவதை தடுக்க குழந்தைகளின் தோலை எப்போதும் ஈரப்பதத்துடனும், ஆரோக்கியமாகவும் வைக்க குழந்தைகளுக்கான சில ஸ்கின்கேர் டிப்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
25
ஈரப்பதம் உள்ள பொருட்கள்
பெற்றோர்களின் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் கிரீம், ஆயில், லோஷன் போன்றவற்றில் ஈரப்பதம் அளிக்கும் மூலக்கூறுகள் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். குறிப்பாக வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, மில்க் புரோட்டின் போன்ற மூலக்கூறுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை தான் உங்கள் குழந்தையின் தோலுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் சருமத்தை மென்மையாகவும் வைக்க உதவும்.
35
குளிக்க வைக்கும் முறை :
சிறு குழந்தைகளை நீண்ட நேரம் குளிக்க வைக்க கூடாது. அதுபோல சுடுநீரில் தான் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் அதிக நேரம் குளிக்க வைக்க கூடாது. அப்படி வைத்தால் குழந்தையின் தோல் வறண்டு போய்விடும். மேலும் சூடான நீரானது குழந்தையின் தோலில் இருக்கும் ஈரப்பதத்தை குறைத்து விடும். அதுபோல உங்கள் குழந்தையின் தோலுக்கு ஏற்ற சரியான பிஹெச் அளவு கொண்ட பேபி லோஷனை கொஞ்சமாக பயன்படுத்தவும்.
குழந்தைகளை குளிப்பாட்டிய பின் அவர்களது தோலுக்கு ஏற்ற மாய்சரைசர் தடவ வேண்டும். அதுவும் மில்க் புரோட்டின் போன்ற மூலக்கூறுகள் இருக்கும் சிறந்த மாய்சரைசர் தான் பயன்படுத்த வேண்டும். அதுபோல் குழந்தைக்கு பயன்படுத்தும் பாடி லோஷனில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி5 போன்ற மூலக்கூறுகள் அதிகமாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கி பயன்படுத்தவும். பேபி லோஷனை குழந்தையின் உடலில் மட்டும்தான் தடவ வேண்டும். கன்னங்களில் தடவினால் அவை சீக்கிரமாகவே வறண்டு போய்விடும். வேண்டுமானால் பேபி க்ரீமை தடவலாம்.
55
டயப்பர் :
குளிர்காலத்தில் குழந்தைக்கு அடிக்கடி டயப்பர் மாற்றுங்கள். அப்போது தான் டயப்பரால் ஏற்படும் ரேஷசஸ் வராது. ஒவ்வொரு முறையும் டயப்பர் பயன்படுத்தும் போது அந்த பகுதியை நன்கு சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் தோல் எரிச்சல் வீக்கம் போன்றவை வரலாம்.