Carrot Storage Tips : கேரட் சீக்கிரமே 'அழுகி' போகாமல் நீண்ட பிரஷ்ஷாக இருக்க 'எப்படி' வைக்கனும்? பலர் அறியாத கிச்சன் டிப்ஸ்

Published : Dec 02, 2025, 03:13 PM IST

கேரட் சீக்கிரமே அழுகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க அதை சேமிக்க சில சூப்பரான கிச்சன் டிப்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
14
Carrot Storage Tips

கேரட் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். பொதுவாக கேரட் வாங்கிட்டு வந்த உடனே அதை பாலித்தீன் கவரிங் போட்டு ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ ஸ்டோர் செய்து வைப்போம். அதனால் கேரட் மேல் பகுதி குழிகுழியாக ஓட்டை போல் அழுக ஆரம்பிக்கும் அல்லது தொளதொளவென்று மாறிவிடும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க சூப்பரான டிப்ஸ்கள் இங்கே.

24
கேரட்டை கழுவும் ;

கேரட்டை வாங்கிட்டு வந்த உடனே அப்படியே ஸ்டோர் செய்யாமல் முதலில் அதை தண்ணீரில் நன்கு கழுவவும். அப்போதுதான் அதன் மேல் இருக்கும் மண் துகள்கள், அழுக்குகள் நீங்கும்.

34
தலைப்பகுதியை வெட்டவும் :

கேரட்டை நன்கு கழுவிய பிறகு ஒரு சுத்தமான துணி கொண்டு அதன் மேல் இருக்கும் ஈரப்பதத்தை துடைத்து எடுக்கவும். பிறகு அதன் தலைப்பகுதியை வெட்டி விடவும். கீழ் நுனியை கூட வெட்டுவது நல்லது தான். அப்போதுதான் கேரட் சீக்கிரமாக அழுகாது.

44
காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்யவும் :

கேரட்டின் தலை மற்றும் நுனி பகுதியை வெட்டிய பிறகு அதை ஒரு காற்று போகாத டப்பாவின் உள்ளே போட்டு டப்பாவை மூடி பின் அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவைப்படும்போது எல்லாம் தேவையான அளவு எடுத்து பயன்படுத்தவும். இந்த முறையில் நீங்கள் கேரட்டை ஸ்டோர் செய்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories