சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பல வீடுகளில் ஸ்மார்ட் ஆன ஒரு காரியம் செய்வார்கள். அதாவது ஒரு முறை சப்பாத்தி மாவு பிசையும் போது கூட 2 நாட்களுக்கு சேர்த்தும் அதிகமாக பிசைந்து, அதை தினமும் பயன்படுத்துவார்கள். நீங்களும் இதே மாதிரி தான் பண்ணுகிறீர்களா? இனி அந்த தப்பை பண்ணாதீங்க. பிரிட்ஜில் சப்பாத்தி மாவை வைப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அறிகுறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாமாம்.
25
பிசைந்த மாவை பிரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் :
பிசைந்த சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் 24 மணி நேரத்திற்கு மேல் வைத்தால் அதந் அதிகமாக நொதித்து அதில் இருக்கும் க்ளூட்டோனை பலவீனமாக்கும். இதனால் அதில் சப்பாத்தி செய்தால் மென்மையாக இருக்காது. கடினமாக இருக்கும். ஜீரணிக்க ரொம்ப தாமதமாகும். இதன் விளைவாக வயிற்று உப்புசம், வாயு தொல்லை உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
35
சத்துக்கள் குறையுமா?
கோதுமையில் அரிசியை விட நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாகவே இருக்கிறது. இது தவிர கொஞ்சம் உயிர் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் சிதைந்து விடும். இதனால் அதை சாப்பிட்டாலும் எந்தவித சத்துக்களும் உடலுக்கு கிடைக்காது.
பிசைந்த சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் ஸ்டார்ச் வேகமாக உடைந்துவிடும். அதில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் ஸ்டார்ச் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குளுக்கோஸ் வேகமாக இரத்தத்தில் கூடி இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடும்.
55
வேறு வழி என்ன?
சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் பல உடல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே எப்போதுமே பிரஷ்ஷாக மாவு பிசைந்து பயன்படுத்துங்கள். அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதை அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விடுங்கள்.