நவீன காலத்தில் ரக்ஷாபந்தன் எப்படி கொண்டாடலாம்? சில ஐடியாக்கள்!
First Published | Aug 10, 2022, 12:22 PM ISTஇன்றை கால மக்கள் படிப்பு, தொழில், சூழல் காரணமாக இனம் மதம், மொழி கடந்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தை பிரிந்து வசித்து வருகின்றனர். அதனால், பொது விழாக்கள், மற்றும் குடும்ப நிகழ்சிகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால், எந்த சூழலிலும் ரக்ஷா பந்தன் என்று வந்து விட்டால், யாரும் அதனை கொண்டாடுவதை விட்டுக் கொடுப்பதில்லை. அருகிலோ, தொலைவிலோ, எங்கு இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் ஆசியையும், பரிசுகளையும் உங்கள் தங்கைகளோடு பகிர்ந்து கொள்வார்கள். தூரத்தில் இருக்கும் அண்ணன்-தங்கைமார்களுக்கான ரக்ஷாபந்தன் ட்ரீட் உங்களுக்காக.