மாறாக, நீங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருந்து ஏசி பெட்டியில் ஏறினால், ரூ.440 அபராதமும் கட்டணமும் செலுத்த வேண்டும். பயண தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடலாம்.
நீங்கள் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்து, உங்கள் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு, உங்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் கவுண்டரில் இருந்து எடுக்கப்பட்ட காத்திருப்பு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படாது.