குழந்தையை அடிக்காம எப்படி ஒழுக்கமாக வளர்க்கலாம்? பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ்
அடிக்காமல், திட்டாமல் குழந்தைக்கு ஒழுக்கத்தை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பதற்கான பெற்றோருக்குரிய சில குறிப்புகள் இங்கே.
அடிக்காமல், திட்டாமல் குழந்தைக்கு ஒழுக்கத்தை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பதற்கான பெற்றோருக்குரிய சில குறிப்புகள் இங்கே.
How to Teach Discipline to Children Without Beating Them : குழந்தைகள் அடம்பிடித்தால், படிக்காமல் இருந்தால் அல்லது தவறாக நடந்துக் கொண்டால் சில பெற்றோர்கள் குழந்தைகளை கத்துகிறார்கள், அடிக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள். மேலும், குழந்தையை அடிக்காமல், திட்டாமல் அவர்களை ஒழுக்கமாக வளர்க்க முடியாது என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. பெற்றோர்கள் இப்படி நடந்து கொள்வது குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பெற்றோர்கள் இந்த பழக்கம் குழந்தைகளை இன்னும் மோசமாக்கும். எனவே, குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல் மற்றும் கத்தாமல் ஒழுக்கமாக வளர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தையின் சொல் பேச்சைக் கேட்காமல் இருந்தால் அவர்களிடம் கத்துவதற்கு பதிலாக பேசுங்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பாக பேசும் விதம் அவர்களை மாற்றும்.
குழந்தைக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் போது அடிக்காமல், அவர்களின் மோசமான நடக்கையின் பின் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். மேலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். இதனால் அவர்கள் மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்- எப்படி தடுக்கனும் தெரியுமா?
பாசம், ஒழுக்கம் என எதுவாக இருந்தாலும், எதுவும் அதிகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, குழந்தையை ஒழுங்குபடுத்தும் முன் முதலில் பெற்றோர்கள் தங்களது சொந்த நடத்தையை மாற்ற வேண்டும். ஏனெனில் குழந்தைகள் தங்களது பெற்றோர் பார்த்து தான் வளருகிறார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகள் எதிர்காலத்தை பாதிக்கும் '4' விஷயங்கள் - சாணக்கியர் நீதி
பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக குழந்தைக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் குழந்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வெறுப்பை உருவாக்கும். இது அவர்களை பெரும்பாலும் ஒழுங்கற்றவராக மாற்றும். எனவே, உங்கள் குழந்தைக்கு முடிந்தவரை நேரம் ஒதுக்குங்கள்.
பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் பேச்சைக் கேட்பதில்லை. ஆனால் பெற்றோரின் இந்த பழக்கம் தவறு. என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் நடத்தை மோசமாக மாற வாய்ப்பு உள்ளது.