Purattasi Valarpirai: இன்று புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்..! எந்த முறை வழிபாட்டிற்கு, என்ன பலன் கிடைக்கும் ..!

Published : Oct 07, 2022, 10:42 AM IST

Purattasi valarpirai pradosham in Tamil: புரட்டாசி மாதம் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதன்படி, என்னென்னெ பொருட்களை வைத்து வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

PREV
15
Purattasi Valarpirai: இன்று புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்..! எந்த முறை வழிபாட்டிற்கு, என்ன பலன் கிடைக்கும் ..!

புரட்டாசி மாதம் என்பது பொதுவாக, பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய உகந்த மாதமாக பக்தர்களால் கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆனால், ஆன்மீக ரீதியில் இந்த மாதத்தில் வருகின்ற புரட்டாசி வளர்பிறை பிரதோஷ நாள் என்பது சிவனை நினைத்து வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

25

இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.அப்படியாக, இந்த பதிவில் நாம் என்னென்னெ பொருட்களை வைத்து வணங்கினால்  சிவபெருமான் மற்றும் திருமால் மற்றும் லட்சுமி தேவியின் அருளை ஒருசேர பெறலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

35

வழிபாட்டு பலன்கள்: 

பால் வழிபாடு: நீண்ட ஆயுள் 

தயிர் வழிபாடு: நிம்மதி 

பஞ்சாமிர்தம்: செல்வம் பெருகும் 

நெய்: முக்தி பேறு கிட்டும்

இளநீர்: நல்ல மக்கட் பேறு கிட்டும்

சர்க்கரை: எதிர்ப்புகள் மறையும்

எண்ணெய்: சுகவாழ்வு 

சந்தனம்: நல்லது நடக்கும்

மலர்கள்:தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும்

தேன்: தீராத பிரச்சனைகளுக்கும் தீரும்

45

வழிபாட்டு முறைகள்:

1. இந்த பிரதோஷ விரதம் வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி, விரதம் இருக்க நினைப்போர் முதலில் எழுந்து குளித்துவிட்டு உணவு, நீர் ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பதே சிறந்தது.

2. இன்றைய நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ உச்சரிக்க வேண்டும். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

55

3. பிரதோஷ தினத்தன்று ரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று  நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

4. சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் . வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

 

click me!

Recommended Stories