World Smile Day: மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ப்ளீஸ்..! புன்னகை நாள் கொண்டாட்டத்தின் சிறப்புகள்

First Published Oct 7, 2022, 9:46 AM IST

World Smile Day 2022: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை நாளான இன்று அக்டோபர் 7ஆம் தேதி உலகப் புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது
 

World Smile Day 2022:

உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மசாசூசெட்ஸின் வொர்செஸ்டரைச் சேர்ந்த வணிகக் கலைஞரான ஹார்வே பால் என்ற ஓவியர் 1963-ல் ‘புன்னகை முகம்’ என்ற இமோஜியை உருவாக்கினார். இதையடுத்து, உலகின் முதல் உலக புன்னகை தினம் 1999 இல் கொண்டாடப்பட்டது.

World Smile Day 2022:

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், மக்கள் அனைவருக்கும் ஒரு நாள் புன்னகைக்கும் அன்பான செயல்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.  புன்னகை செய்ய எந்த வலுவான காரணமும் அவசியம் இல்லை. 

World Smile Day 2022:

கடந்த 2001 இல்ஹார்வே பால்  இறந்த பிறகு, அவரது பெயரையும் நினைவையும் போற்றும் வகையில் வேர்ல்ட் ஸ்மைல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. சிறு புன்னகையின் மூலம் மனம் அமைதி அடையும். புன்னகைக்கும் போது முகத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், எதிர்மறை உணர்வுகள் குறையும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

World Smile Day 2022:

“சிரிக்காத ஒரு நாள் வீணானது'' என்று சார்லி சாப்ளின் ஒருமுறை கூறினார்.

ஆம், ஒரு நல்ல சிரிப்பு ஒரு சிகிச்சை போன்றது. இது உங்கள் நாள், உங்கள் ஆன்மா மற்றும் மனதை பிரகாசமாக்குகிறது. புன்னகை விலைமதிப்பற்றது. ஒருபோதும் சிரிக்க மறக்காதீர்கள். பல்வேறு நோய்க்கு சிரிப்புதான் சிறந்த மருந்து. ''வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்'' இதுதான் உண்மையாகும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

click me!