காரில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது..விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..!

First Published Oct 7, 2022, 8:02 AM IST

Children Car Safety Tips: உங்கள் குழந்தைகளுடன் காரில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்கு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது,
 

கார், பஸ் போன்ற, ஆட்டோ மொபைல் வாகனங்கள் கப்பல்கள், விமானங்கள் போன்றவற்றில் குழந்தைகள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதில் பெற்றோர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால், அவர்கள் புதிய விஷயங்களைப் பார்ப்பார்கள், புதிய இடங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க..Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்
  

அப்படியான, இனிமையான பயணத்தின் போது குழந்தைகள் பல குறும்புகளை செய்வதுண்டு. குழந்தைகள் காரில், பயணம் மேற்கொள்ளும் போது ஜன்னலுக்கு வெளியே பார்க்க முயற்சி செய்கிறார்கள். ஜன்னல் கண்ணாடிகளை மீண்டும் மீண்டும் திறந்து மூடுகிறார்கள்.

ஆனால், சில நேரம் இவை ஆபத்தாகவும் முடிகிறது.  எனவே, இனிமேல் உங்கள் குழந்தைகளுடன் காரில் பயணம் செய்யும் போது ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்
  

 

 
குழந்தைகளுடன் காரில் பயணம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

1. குழந்தைகள் கார் இருக்கை பயன்படுத்துவது அவசியம்.

 2. குழந்தை கார் இருக்கையில் இருக்கும் போது காயமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சீட் ஹார்னஸ் ஸ்ட்ராப்கள் குழந்தைக்கு வசதியாக பொருந்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
 

3. காரில் இருந்த குழந்தைகள் ஜன்னலுக்கு வெளியே கைகளை வைத்து கதவை திறக்க முயல்கின்றனர். பொதுவாக இதுபோன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, காரில் குழந்தை பாதுகாப்பு பூட்டை பயன்படுத்தவும். இது விபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும். 

4. இதனால், குழந்தைகள் ஓடும் காரில் ஜன்னல், கதவுகளை திறக்க முடியாமல், பயணத்தின் போது பாதுகாப்பாக இருப்பார்கள். 
 
5. பயணத்தின் போது உணவளிக்க வேண்டாம். சிலர் பயணத்தின் போது காரில் உணவு, பானங்களை வைத்து  குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்வது ஆபத்தானது. 

6. ஏனெனில் சில நேரங்களில் திடீர் பிரேக்கிங் அல்லது குண்டும் குழியுமான சாலை காரணமாக குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கிக்கொள்ளலாம். எனவே, பயணத்தின் போது காரில் மிகச் சிறிய குழந்தைகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க..Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்
  

 

click me!