புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள்:
இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பெருமாளை விரதம்மிருந்து, வணங்கினால் தடைகள் நீங்கும். ஏழரை சனி, அர்த்தாஸ்ட சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினால் பாதிப்புகள் குறையும்.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறையும். மன அமைதி இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். கடன் பிரச்சனை நீங்கும். செல்வம் வந்து சேரும்.
மேலும் படிக்க...தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் பூஜை செய்யும் போது..இனிமேல் இந்த ஒரு காரியம் மட்டும் செய்யுங்கள்