முதன் முதலில் 1977-ஆம் ஆண்டு வட அமெரிக்க சைவ சங்கம்தான் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினத்தை நிறுவியது. சைவ உணவின் முக்கியத்துவம், அதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். பின் 1978-இல் உலக சைவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சிறப்புச் சத்துக்கள் கொண்ட உணவை சைவம் என்று சொல்லலாம். குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சைவத்திற்கு மாறுவதை நாம் நிறையப் பார்க்க முடியும். எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளி:
சைவ உணவுகளில் பொதுவாக வைட்டமின் சி, டி மற்றும் மினரல்கள் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. குறிப்பாக, தக்காளியில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, சி, கே போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் எடை குறைப்பு வரை பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும். மேலும், இது தோல் பிரச்சனைகளை சரிசெய்து, இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க..உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?
பப்பாளி
பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் புரதச்சத்து பல வகையான தோல் நோய்கள் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகள் குறையும். உடலின் ஆற்றலுக்கு புரதச்சத்து மிக அவசியமான ஒன்று. எலும்பு மற்றும் தசைகளின் வலுவுக்கு புரதச்சத்து அவசியம். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
புற்றுநோய் அபாயம் குறைக்கும் சைவ உணவுகள்:
சைவ உணவு சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே காய்கறிகள், பழங்கள் அதோடு நட்ஸ் , விதைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது ஆகும்.
கீரை
கீரையில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குறிப்பாக, கீரை சாப்பிடும் ஒருவருக்கு, சுவாச பிரச்சனைகளை கட்டுக்குள் இருக்கும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக, பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் ரத்தசோகை பிரச்சனை குறையும். மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.