நம்மள ஒருத்தர் விரும்புறாங்களா, இல்ல நாமளா கற்பனை பண்ணிக்கிறோமானு பலருக்கும் சந்தேகம் வரும். சிலர் மனசுல இருக்கிறத நேரா சொல்லிடுவாங்க. சிலர் தயங்குவாங்க. அவங்க நடவடிக்கையில சில மாற்றங்கள் தெரியும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. அது என்னனு பார்ப்போம்.
26
பேச்சு கொடுக்க முயற்சிப்பது
உங்க மேல க்ரஷ் இருக்கிறவங்க, உங்ககிட்ட பேச வாய்ப்பு தேடுவாங்க. தேவையில்லாம சின்ன சின்ன காரணங்களைச் சொல்லி உங்ககிட்ட பேசுறது, நீங்க இருக்கிற இடத்துக்கு வர்றதுனு இருப்பாங்க. பிடிச்சவங்களோட அதிக நேரம் செலவிடணும்னு நினைக்கறது இயல்புதான். அதனால, அவங்க உங்ககிட்ட பழக முயற்சி பண்ணுவாங்க.
36
உங்கள் பேச்சை கவனமாகக் கேட்பது
மத்தவங்க கண்டுக்காத சின்ன சின்ன விஷயங்களைக்கூட அவங்க ஞாபகம் வெச்சிருப்பாங்க. நீங்க சொன்னதை அப்புறமா பேச்சும்போது குறிப்பிடுவாங்க. உங்க விருப்பங்கள் பத்தி ஆர்வமா கேட்பாங்க. சைக்காலஜி படி, நமக்கு பிடிச்சவங்கள பத்தி அதிகமா தெரிஞ்சுக்க நினைக்கறது இயல்பு. அதனாலதான் உங்க பேச்சை ரொம்ப கவனமா கேட்பாங்க.
நீங்க பேசும்போது அடிக்கடி உங்க கண்ணைப் பார்ப்பாங்க. நீங்க பார்த்ததும் லேசா சிரிப்பாங்க. ஆனா, சிலர் வெட்கத்தினால நேரா பார்க்காம பார்வையைத் திருப்பிடுவாங்க. அதனால, கண் பார்வையை மட்டும் வெச்சு ஒரு முடிவுக்கு வராதீங்க.
56
உங்கள் சந்தோஷத்தை விரும்புவது
நீங்க ஜெயிக்கும்போது மனசார பாராட்டுவாங்க. நீங்க சோகமா இருந்தா காரணத்தை தெரிஞ்சுக்க முயற்சிப்பாங்க. தேவைப்படும்போது உதவி செய்வாங்க. நமக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருக்கணும்னு நாம நினைக்கறது இயல்பான உணர்வுதான். அதனால உங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சப்போர்ட் பண்ணுவாங்க.
66
பேச்சில் தடுமாற்றம்
எல்லார்கிட்டயும் தைரியமா பேசுற ஒருத்தர், உங்ககிட்ட பேசும்போது மட்டும் வார்த்தைகள் தடுமாறுறது, தேவையில்லாம சிரிக்கிறது, சின்ன சின்ன தவறுகள் பண்றது, இல்லனா கொஞ்சம் பதட்டமா தெரியலாம். பிடிச்சவங்க முன்னாடி நல்ல பெயர் வாங்கணும்னு நினைக்கிறதால இப்படி சிலர் நடந்துகொள்வாங்கன்னு சைக்காலஜி சொல்லுது.
சிலர் இயல்பாவே எல்லாரோடவும் நட்பா பழகுவாங்க. அதனால, ஒரே ஒரு அறிகுறியை வெச்சு முடிவு பண்ணாம, திரும்பத் திரும்ப நடக்குற விஷயங்களை கவனிங்க. அவங்க தெளிவா சொல்ற வரைக்கும், நீங்களா ஒரு முடிவுக்கு வர்றது சரியில்லைனு நிபுணர்கள் சொல்றாங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.