
பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் பால் குடிப்பது அனைவரது வீட்டிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம்.
பால் குடித்தால் பலவீனமான எலும்புகள் பலனடையும், தசைகளும் வலுவடையும். இதனால் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். மேலும் பாலில் இருக்கும் வைட்டமின் டி மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால்தான் பலரது வீட்டில் காலை மட்டுமின்றி, இரவு தூங்கும் முன்னும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இப்போது வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பால் காய்ச்சாமல் பிரிட்ஜில் வைத்தால் 'இப்படி' ஒரு பிரச்சனை வரும் தெரியுமா? உஷாரா இருங்க!!
வெறும் வயிற்றில் பால் குடிப்பதன் நன்மைகள்:
- காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில், இதில் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- தொடர்ந்து வெறும் வயிற்றில் பால் குடித்து வந்தால் வாயு தொல்லை, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று சிலர் சொல்லுகின்றனர். இதுதவிர, பாலில் இருக்கும் கொழுப்பு வயிற்று எரிச்சலை குறைக்க உதவுகின்றது.
- பாலில் இருக்கும் புரதம் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் பசி ஏற்படாது.
- ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் முழு கொழுப்புள்ள பாலில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் எடை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: பாலுடன் முட்டையா? நன்மைகளுடன் வரும் ஆபத்து!
வெறும் வயிற்றில் பால் குடிப்பதன் தீமைகள்:
- ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது அது நன்மைக்கு பதிலாக, தீங்கு தான் விளைவிக்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டோஸ் (சர்க்கரை) உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்யும்.
- சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும். அத்தகையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் பால் குடித்தால் சருமத்தில் அரிப்பு, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- வெறும் வயிற்றில் பால் குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும். இதனால் வயிற்று உப்புசம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- பால் அமிலத்தன்மை கொண்டது என்பதால் வெறும் வயிற்றில் பால் குடித்தால் சிலருக்கு அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
- காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் அதில் இருக்கும் கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும். இதனால் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
- நீங்கள் ஏதேனும் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டால் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டாம். ஏனெனில் பாலில் கால்சியம் இருப்பதால் அது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை செயல்படுத்தாது.