தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம்.. விரைவில் குணமாக சூப்பர் '3' டிப்ஸ்!

Published : Dec 09, 2024, 11:40 AM ISTUpdated : Dec 09, 2024, 11:48 AM IST

Throat Pain Home Remedies : தொண்டை வலியால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட கீழே வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள் அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.

PREV
15
தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம்.. விரைவில் குணமாக சூப்பர் '3' டிப்ஸ்!
Home remedies for throat pain in tamil

பொதுவாகவே குளிர்காலத்தில் தொண்டை வலி பிரச்சனை அதிகமாகவே வரும். இது சாதாரணமானது அல்ல. மாறிவரும் வானிலையால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வெளிப்பாடு காரணமாக தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மாறிவரும் இந்த சீசனில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எல்லா இடங்களிலும் பரவுகிறது. 

25
Throat pain causes in tamil

இத்தகைய சூழ்நிலையில், தொண்டை வலி ஏற்படுவதும் பொதுவானது தான். இந்த சமயத்தில் தண்ணீரை கூட விழுங்குவது மட்டுமின்றி, பேசுவதிலும் சிரமமாக இருக்கும். இன்னும் சிலருக்கோ காய்ச்சல் இல்லாமல் கூட தொண்டை வலி ஏற்படும் இதனால் எச்சில் கூட விழுங்க முடியாத அளவுக்கு வலியை அனுபவிப்பார்கள் இதற்கு முக்கிய காரணம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே குறைவாக இருப்பதால்தான். ஆனால், இந்த தொண்டை வலி பிரச்சனையை இயற்கை மருத்துவத்தில் மிகவும் எளிதான முறையில் குணப்படுத்தி விடலாம் தெரியுமா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:   தொண்டையில் தொற்று ஏற்பட்டால் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!

 

35
Throat pain relief in tamil

தொண்டை வலியை சுலபமாக குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

தொண்டை வலியால் எதையும் விழுங்க முடியாமல் சிரமப்படுகிறவர்களுகான டிப்ஸ்:

தேவையான பொருட்கள்:

இலவங்கப்பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி துண்டு - 25 கிராம் ( தோல் நீக்கியது)
புதினா இலை - 5
தண்ணீர் - 2 கிளாஸ்

தயாரிக்கும் முறை :

இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பின் அதில் பட்டை சோம்பு இஞ்சி துண்டு புதினா இலை ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும். பிறகு அந்த தண்ணீரை மிதமான சூட்டில் இருக்கும் போது குடிக்கவும் இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை வலி விரைவில் நீங்கிவிடும்.

45
Sore throat remedies in tamil

தொண்டைவெளியால் பேசவே முடியாதவர்களுக்கான டிப்ஸ்:

தேவையான பொருட்கள்:

திரிபலா சூரணம் 
மஞ்சள் தூள் - சிறிதளவு
தண்ணீர் - 2 கிளாஸ்

தயாரிக்கும் முறை :

இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதனுடன் திரிபலா சூரணம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அந்த நீரானது மிதமான சூட்டில் இருக்கும் போது தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் விரைவில் நன்றாக பேசுவீர்கள்.

55
Natural cures for sore throat in tamil

நாள்பட்ட தொண்டை வலியால் சிரமப்படுகிறவர்களுக்கான டிப்ஸ்:

நாள்பட்ட தொண்டைவெளியால் சிரமப்படுகிறது சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் தொண்டை வலி குணமாகும். அதுமட்டுமின்றி தொண்டு புண் ஏதேனும் இருந்தால் அதுவும் ஆகிவிடும்.

இதையும் படிங்க:  தாங்க முடியாத தொண்டைப்புண் வலியை விரட்டி அடிக்கும் 1 ஸ்பூன் தேன், இஞ்சி.. அற்புதம்!!

Read more Photos on
click me!

Recommended Stories