இதை தயாரிப்பது எப்படி?
இதற்கு முதலில் ஒரு காட்டன் துணி அல்லது கைக்குட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் கற்பூரத்தை சேர்க்கவும் இதனுடன் நீங்கள் விரும்பினால் சிறிதளவு கிராம்பு, பரிகாரம் அல்லது நாப்தலின் பால்ஸ் சேர்த்து அதை கட்டிக் கொள்ளுங்கள். இப்போது இதை உங்கள் வீட்டின் பாத்ரூமில் தொங்க விடுங்கள்.
இப்படி செய்வதன் மூலம், அதில் இருக்கும் கற்பூரத்தின் வாசனையானது காற்றுடன் இணைந்து உங்களது குளியலறை முழுவதும் வாசனையை பரப்பு. இதனால் உங்களது குளியலறை எப்போதுமே வாசனையாக இருக்கும். ஒருபோதும் துர்நாற்றம் அடிக்காது. அதுமட்டுமின்றி ஈக்கள், எறும்புகள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் தொல்லையும் இருக்காது.
எனவே நீங்கள் இந்த டிப்ஸை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பிறகு உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்