
எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும் முடியாத காரியம் அல்ல. தொடர்ந்து முயற்சி செய்வது எடையை குறைக்க உதவும். உங்களால் ரொம்ப நேரம் நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாவிட்டாலும், தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்வது எடையை குறைக்க உதவும். எடையைக் குறைய நடைபயிற்சி மிகவும் உதவுக்கூடிய ஒன்றாகும். 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நாம் நடக்கும் காலடிகளின் எண்ணிக்கையை பொறுத்து பலன்களை பெறலாம். பொதுவாக 1 கிலோ எடையைக் குறைக்க எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என இங்கு காணலாம்.
எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும்?
ஒரு கிலோ எடை என்பது 7,700 கலோரிகளாகும். அதனால் ஒரு கிலோ எடையை நீங்கள் குறைக்க விரும்பினால் 7 ஆயிரத்து 700 கலோரிகளை எரிப்பது அவசியமாகிறது. சுமார் 70 கிலோகிராம் எடையுள்ள ஒருவர் ஒரு நாளில் 1000 காலடிகளை நடந்து முடிக்கும்போது தோராயமாக 40 - 50 கலோரிகள் எரிகின்றன. இந்த கலோரிகள் ஒரு நபரின் நடையின் வேகம், எடை, அவர் எட்டு வைக்கும் தூரம், நிலப்பரப்பு போன்றவை அடிப்படையில் மாறலாம்.
இதையும் படிங்க: வாக்கிங்; எத்தனை' காலடிகள் நடந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?
ஒருவர் 10 ஆயிரம் காலடிகள் நடந்தால் தோராயமாக 400 முதல் 500 கலோரிகளை எரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 7,700 கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 முதல் 3 லட்சத்து 85 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் காலடிகள் நடக்கலாம். \
ஆனால் இவ்வளவு காலடிகள் நடப்பது பலருக்கு முடியாத காரியமாகும். ஆகவே நாளொன்றுக்கு 10 ஆயிரம் காலடிகள் என்ற அடிப்படையில் நடக்கத் தொடங்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எடையை குறைக்க நடைபயிற்சியுடன் சில உடற்பயிற்சிகளையும் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் விரைவில் எடையை குறைக்க முடியும்.
எடை குறைக்கும் பயிற்சிகள்:
எடையை கணிசமாக குறைக்க அன்றாட வாழ்வில் பல்வேறு உடற்செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகள், வலிமை பயிற்சிகள் (strengthen workouts), ஹிட் பயிற்சிகளை (HIIT) செய்யலாம். இவை உடலை வலிமையாக்குவதோடு எடை குறைவதையும் ஊக்குவிக்கிறது. இதனோடு சரியான உணவு பழக்கம் அவசியமாகிறது.
இதையும் படிங்க: பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!
காலடிகளை கவனித்தல்:
தினமும் நீங்கள் நடக்கும் தூரத்தையும், காலடிகளின் எண்ணிக்கையையும் கண்காணிப்பது அவசியம். நாள்தோறு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். பிட்னஸ் ஆப்ஸை சரியாக உபயோகித்து உங்கள் காலடிகளை கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் சற்று முன்னேற்றம் காணும் வகையில் காலடிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி செய்யலாம்.
தொடர் முயற்சி:
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நிலைப்புத்தன்மையை கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு நாள் சரியான உணவு, தூக்கம், நடைபயிற்சி என செய்து விட்டு மறுநாள் எதையும் செய்யாமல் இருக்கக் கூடாது. தொடர்ந்து ஒழுங்காக நடைபயிற்சி செய்ய வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றுவதோடு ஆரோக்கியமான உணவு பழக்கம், நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான மனநிலை ஆகியவை இருந்தால் கணிசமாக எடையைக் குறைக்கமுடியும்.