
தேன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன. அதுவும் குறிப்பாக, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி பழங்கால வைத்தியத்திலும் தேன் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
தேனில் வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லதாம். ஏனெனில், குளிர்காலத்தில் அதன் குளிர்ச்சியான ஈரப்பதம் காரணமாக நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும், சூடாகவும் வைத்துக்கொள்ள தேன் பெரிதும் உதவுகிறதாம்.
அந்த வகையில், குளிர் காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல நோய்கள் நீங்கும். இதுகுறித்து விரைவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!
குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் ஒரு ஸ்பூன் தேனில் சிறிதளவு மஞ்சள் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும் மற்றும் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்லுகின்றன.
சளி & இருமல் குணமாகும்:
குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும். ஏனெனில் தேனில் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளது. மேலும் சூடான நீரில் அல்லது மூலிகை தேநீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டை பிரச்சினை சரியாகும்.
இதயத்திற்கு நல்லது:
தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் இதயம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், நீங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அலர்ஜி பிரச்சனை நீங்கும்:
தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், குளிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினையை சரிசெய்ய தேன் உதவுகிறது. இதற்கு சிறிது சூடான் நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மஞ்சள் கலந்து குடித்து வந்தால் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.
இதையும் படிங்க: அப்ப தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையாதா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
செரிமான பிரச்சனை சரியாகும்:
குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனையை சரிசெய்ய தினமும் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதுதவிர, வாயு மற்றும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முக்கிய குறிப்பு : உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது அதற்கு மருந்து எடுத்துக் கொண்டாலோ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.