
நமது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இளமையாக இருந்தபோது, சமூக ஊடகங்களும் டேட்டிங் செயலிகளும் இல்லை. அவர்களின் காதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் தனக்கு பிடித்த ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ காதலித்தால், தங்கள் காதலை அவர்களிடம் வெளிப்படுத்தியதற்கும் துணிச்சலும் தைரியமும் தேவைப்பட்டது.
ஆனால் இப்போது டேட்டிங் பயன்பாடுகளின் மூலம் பலரும் காதலிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் ஸ்பெயினில் தங்கள் துணையை கண்டுபிடிக்க ஸ்பெயின் நிஜ உலகத்திற்கு யு-டர்ன் எடுத்து வருகிறது. ஆன்லைன் இயங்குதளங்களைத் தவிர்த்துவிட்டு, ஆஃப்லைனில் உள்ளவர்களுடன் இணைவதற்கு ஸ்பெயினின் இளம் தலைமுறையினர் மீண்டும் முன்னேறி வருகின்றனர். அன்னாசிப்பழம் டேட்டிங் என்ற டேட்டிங் முறை ஸ்பெயினில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்பெயினில் உள்ள சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள், தங்கள் துணையை தொடர்புகொள்வதற்கான ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய நிகழ்வில் அன்னாசிப்பழம் பெரும் பங்கு வகிக்கிறது. தங்கள் துணையை சந்திப்பதற்கும், பழைய பாணியில் அன்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஸ்பெயினில் சிங்கிள் இளைஞர்கள் மெர்கடோனா பல்பொருள் அங்காடிக்குச் செல்கிறார்கள்.
மெர்கடோனா சூப்பர் மார்க்கெட்டுகளில் அன்னாசிப்பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஷாப்பிங் டிராலிகளில் அன்னாசிப்பழத்தை எடுத்துச் செல்லும் கமிட் ஆகாத சிங்கிள் இளைஞர்கள் கடைகளில் தங்கள் ஜோடிகளை தேடுவதைக் காணக்கூடிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
தலைகீழாக அன்னாசிப்பழத்தை வைத்திருப்பது, அந்த நபர் டேட்டிங் செய்ய தயாராக இருக்கிறார் என்று அர்த்தம். யாருக்காவது அந்த நபரை பிடித்துவிட்டால் அவர்கள் தங்கள் வண்டிகளை மற்றவர் வண்டி மீது மோத வேண்டும். அப்படி மோதனால் அந்த இருவரும் தங்கள் உறவை அடுத்தக் கட்டங்களுக்கு எடுத்து செல்லலாம். இருவரும் வெளியிடங்களுக்கு சென்று அவர்கள் பேசி பழகலாம்.
அன்னாசி உத்தியைத் தவிர, வேறு சில கூறுகளும் உள்ளன. தங்கள் வணிக வண்டியில் சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை சேர்க்கலாம், மேலும் இவை தீவிரமான, நீண்ட கால உறவுகளுக்கான குறியீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த வழக்கில், சாதாரண உறவுகளைத் தேடுபவர்கள் தங்கள் தள்ளுவண்டிகளில் பருப்பு வகைகள் அல்லது கீரைகளை வைக்க வேண்டுமாம்.
டேட்டிங் ட்ரெண்டைப் பின்பற்ற மெர்கடோனா ஸ்டோர்களுக்கு அதிகமான சிங்கிள்கள் விரைந்ததால், அன்னாசி பழத்தின் தேவை எகிறிக் கொண்டிருக்கிறது. மேலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சூப்பர் மார்க்கெட் கடைகளில் சிறப்பு வாய்ந்த ஒருவரைக் கண்டறிய மக்கள் முயற்சி செய்யலாம்.