
முல்தானி மட்டி ஒருவிதமான மண் வகையைச் சேர்ந்தது. இதில் இருக்கும் மருந்துவ குணங்கள் சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. முல்தானி மட்டி பல தோல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் விடுபட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் இதில் சருமத்திற்கு தேவையான மினரல்களும், சிலிகேட்டும் நிறைந்துள்ளது. முக்கியமாக, இது மிகச் சிறிய கடைகளில் கூட கிடைக்கும்.
பெரும்பாலும் இது என்னை சருமம் உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. காரணம், அவர்களது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி, சருமத்திற்கு நிகழ்வு தன்மையை கொடுத்து, முகத்தை பளபளப்பாக மாற்றும். இது தவிர, சூரிய ஒளியால் ஏற்படும் சன்டேனை குறைக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
முல்தானிமட்டி சருமத்திற்கு எவ்வளவு நன்மைகளை வழங்குகிறதோ, அதே போல இதை தவறான வழியில் பயன்படுத்தினால் சில பக்க விளைவுகளையும் உண்டாக்கும். மேலும் இது சிலருக்கு தீங்கு விளைவுக்கும். இப்போது முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது? அதை எப்படியெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
முல்தானி மெட்டி யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
உணர்திறன் சருமம் உள்ளவர்கள் :
உங்கள் சருமம் மிகவும் உணர்ந்துடன் உடையதாக இருந்தால், முல்தானி மட்டியை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை விரும்பினால், மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் முகத்தில் தடிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, உங்கள் சருமமும் மிகவும் மந்தமாகிவிடும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் :
வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டியை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது. அப்படி பயன்படுத்தினால் உங்களது சருமம் மிகவும் வறட்சியாகிவிடும். இதன் காரணமாக தோல் உயிரற்றதாகிவிடும்.
சளி இருமல் இருந்தால் :
சளி இருமலால் அவதிப்படுபவர்களுக்கு முல்தானி மட்டி நல்லதல்ல. காரணம், இது சளி மற்றும் இருமல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: முல்தானி மிட்டியை தினமும் யூஸ் பண்ணா என்ன ஆகும்? அவசியம் 'இத' தெரிஞ்சுக்கோங்க..
இவை தவிர...
உங்கள் முகத்தில் ஏதாவது பருக்கள் காயங்கள் இருந்தால் அவற்றின் மீது முல்தானி மட்டி போடக் கூடாது. மீறினால் அது ரத்தத்துடன் கலந்து சருமத்திற்குள் சென்று மோசமான சரும பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை பருக்கள் உடையாமல் இருந்தால் நீங்கள் முல்தானி மட்டியை போடலாம்.
முல்தானி மட்டியை முகத்திற்கு போடும்போது கண்களுக்கு கீழ் ஒருபோதும் அப்ளை செய்யக்கூடாது. ஏனெனில், அந்த பகுதி மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதால், கண்களை சுற்றி உள்ள நீர்ச்சத்தை அது உறிஞ்சி சருமத்தை அதிகப்படியாக வறட்சியடைய செய்யும். இதனால் இளம் வயதிலேயே அதிகப்படியான சுருக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் வயதான தோற்றத்தையும் காட்டும்.
முல்தானி மட்டியை முகத்திற்கு பயன்படுத்திய பிறகு சாதாரண நீரை கொண்டு முகத்தை கழுவுங்கள். முகத்தை கழுவிய பிறகு சோப்பு பயன்படுத்தக் கூடாது இதனால் சருமத்தில் அரிப்பு எரிச்சல் உண்டாகும்.
இதையும் படிங்க: Beauty Tips : கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவாக முல்தானி மெட்டியை 'இப்படி' யூஸ் பண்ணுங்க..!!
முல்தானி மட்டி ஃபேஸ் பேக் :
எந்தெந்த சருமத்திற்கு முல்தானி மட்டியை எந்த பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மட்டி ஃபேஸ் பேக் :
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு பெளவுலில் இரண்டு ஸ்பூன் முல்தானி மட்டி, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சந்தன பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைக்கவும். இப்போது இந்த பேஸ்டே உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே காய வைக்கவும். அதன்பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு உங்க முகத்தை கழுவுங்கள். பின்பு உங்கள் முகத்தில் மாய்ஸ்ச்சசசரை அப்ளை செய்யுங்கள். இது உங்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, உங்களது சருமத்தை சுத்தமாக வைக்கும்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முல்தானிமட்டி ஃபேஸ் பேக் :
உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் முல்தானிமட்டி, இரண்டு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து பேஸ்ட் போலாக்கி, அந்த பேஸ்ட்டே உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவி கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் காய வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மீறினால் உங்களது முகம் சீக்கிரமே வறண்டு போய்விடும். எனவே இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு : முல்தானி மட்டியை தினமும் முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இதனால் சருமம் சீக்கிரமே வறண்டு காணப்படும்.