குழந்தைகளுக்கு 'ட்ரெஸ்' வாங்குறப்ப இதை கவனிப்பீங்களா? வெயிலில் கண்டிப்பா பார்க்கனும் 

Published : Mar 17, 2025, 03:43 PM IST

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.   

PREV
17
குழந்தைகளுக்கு 'ட்ரெஸ்' வாங்குறப்ப இதை கவனிப்பீங்களா? வெயிலில் கண்டிப்பா பார்க்கனும் 

How To Choose Clothes For Children : குழந்தைகளுக்கு ஆடைகளை வாங்கும் போது பெற்றோர் எப்போதும் அதிக கவனத்துடன் இருப்பார்கள். ஏனென்றால் குழந்தைகள் அழகாகவும் அதே சமயத்தில் அவர்களுக்கு வசதியாகவும் ஆடைகள் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள். அதிலும் குழந்தைகளுக்கு கோடைகால ஆடைகளை வாங்குவது கொஞ்சம் கடினமான காரியம் என்பது  அனுபவமுள்ள பெற்றோருக்கு தெரிந்த விஷயம்தான். இந்த பதிவில் குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் இருக்கும் ஆடைகளை எப்படி தேர்வு செய்யலலாம் என காணலாம்.

27
பெற்றோர் தவிர்க்க வேண்டிய தவறு:

குழந்தைகளுக்கு தவறான துணிகளை வாங்குவது அவர்களை கோடைகாலம் முழுவதிலும் அசௌகர்யமாக உணர வைக்கும். வெப்பத்தை உறிஞ்சும் துணிகளை வாங்கினால் அது குழந்தைகளுக்கு  அசௌகரியம், எரிச்சலை ஏற்படுத்தலாம். இப்படியான ஆடைகளை தவிர்க்க வேண்டும். 
பாலியஸ்டர் வகை துணிகள் மலிவானதாக இருந்தாலும் வெப்ப நாட்களில் குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. பருத்தி, கைத்தறி போன்ற இயற்கையான துணிகளை தேர்வு செய்ய வேண்டும். இதுவே காற்றோட்டமான உணர்வை தரக் கூடியவை. வியர்வையின்  ஈரப்பதத்தை நீக்கும். குழந்தைகளின் சருமத்தில் மென்மையான உணர்வை தரும். 

37
ஆடை தரம்:

உடைகள் கரடுமுரடானதாக இல்லாமல் மென்மையாக இருக்கும்படி தேர்வு செய்ய வேண்டும்.  ஏற்கனவே அரிக்கும் தோல் அழற்சி அல்லது உணர்திறன் வாய்ந்த மென்மையாக சருமம் கொண்ட குழந்தைகளுக்கு மென்மையான துணிகளையே தேர்வு செய்ய வேண்டும். 

47
துணி மென்மையானதாக இருப்பதை அறிவது எப்படி?

மென்மையாக இருப்பதை அறிய பெற்றோரின் கன்னத்தில் துணியை தேய்த்து பார்த்தால் தெரியும். தேய்த்ததும் உங்களுக்கு அரிப்பு வந்தால் அதை வாங்க வேண்டாம். 

இதையும் படிங்க:  வெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!!

57
ஆடை அளவு:

குழந்தைகளுக்கு கோடைகால ஆடைகளை சற்று தளர்வாக வாங்க வேண்டும். அவர்களின் திடீர் வளர்ச்சி உடைகளை இறுக்கமாக உணர வைக்கலாம். ரொம்ப தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இல்லாமல் எடுக்க வேண்டும். அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இடுப்புப் பட்டைகள், நீட்டக்கூடிய துணிகளை வாங்கலாம். 

இதையும் படிங்க:   பெற்றோர் சொல்றத  குழந்தைங்க மதிக்கலயா?  இதுதான் காரணம்.. உடனே மாத்துங்க!! 

67
காலணிகள்:

காலணிகள் வாங்கும்போது இறுக்கமாக தேர்வு செய்யக் கூடாது. பொருத்தமில்லாத காலணிகள் கொப்புளங்களை வரவழைக்கும். பெரிய காலணிகள் சறுக்குதலுக்கு வாய்ப்பளிக்கும். காலணிகள் வாங்கும்போது செருப்புகளின் முன்பக்கம்  ஒரு சிறிய இடைவெளி (1 கட்டைவிரல் அகலம்) இருக்குமாறு வாங்குங்கள்.  

77
எப்படிப்பட்ட ஆடைகள் வாங்க வேண்டும்?

குழந்தைகள் ஓடியாடி விளையாட, குதிக்க ஏற்ற ஆடைகளை வாங்குங்கள்.  ஆடைகள் குழந்தைகளை வசதியாக உணர செய்ய வேண்டும். அவர்களின் சருமம் காற்றோட்டத்தை உணர வேண்டும்.  கடினமான துணி வகைகள், பாலியெஸ்டர் துணிகள், இறுக்கமான இடுப்புப் பட்டைகள் போன்றவை தவிர்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories