நம்முடைய ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் நமது கைகளுடன் தொடர்புள்ளது. கைகளால் சில முத்திரைகள் செய்யும்போது கைகளில் தனித்துவமான அசைவுகள் இருக்கும். அதில் கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்தும்போது உடலில் உள்ள ஆற்றல் நிலைகள், குணப்படுத்தும் செயல்முறைகள் நேரடியாகவே தூண்டப்படுகின்றன. உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பலர் கைகளில் முத்திரை செய்வதை கவனித்து பார்த்தால் தெரியும். இந்த பதிவில் பணக்காரர்கள், சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்தும் 5 சக்தி வாய்ந்த முத்திரைகளை குறித்து காணலாம்.