
How to Identify Artificially Ripened Mangoes : கோடை காலம் வந்தாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனெனில் இந்த சீசனில் மட்டும் தான் சுவையான மற்றும் விதவிதமான மாம்பழங்கள் கிடைக்கும். மாம்பழ சீசன் தொடங்கி விட்டாலே பல வகையான மாம்பழங்கள் சந்தையில் விற்பனையாகும். உண்மையில், மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். ஆனால் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை விட, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைக் கொண்டு தான் செயற்கை மாம்பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாம்பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால ஆபத்தை விளைவிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கை பழுத்த மாம்பழம் அல்லது போலி மாம்பழத்தை சாப்பிடுகிறீர்களா என்று தெரியாமல் கவலைப்படுகிறீர்களா? போலி மாம்பழத்தை கண்டுபிடிக்க உதவும் சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு மாம்பழ சீசனில் மாம்பழம் வாங்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் படித்து நல்ல மாம்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: அனைவருக்கும் பிடித்த மாம்பழத்தில் இருக்கும் இந்த நன்மைகள் பற்றி தெரியுமா?
மாம்பழங்களை வாங்கிட்டு வந்தவுடன் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி, அதில் மாம்பழங்களை போடவும். மாம்பழங்கள் மூழ்கினால் அது இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டது. அதுவே மாம்பழங்கள் மூழ்காமல் மிதந்து இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழமாகும்.
மாம்பழத் தோலின் நிறம்:
செயற்கையாக பழுத்த மாம்பழங்கள் ஒரே மாதிரியான நிறத்தில் தான் இருக்கும். அதுவே இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதைவிட சற்று மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். மேலும் அவை சற்று பளபளப்பான தேற்றத்தையும் கொண்டிருக்கும்.
இதையும் படிங்க: மாழ்பழத்தை பழுக்க வைக்க கார்பைடுக்குப் பதில் எத்திலீன் வாயுவை பயன்படுத்தலாம்: FSSAI அனுமதி
இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்கள் ஒரு விதமான இனிமையான மற்றும் பழத்தின் வாசனையை கொண்டிருக்கும். அதுவே செயற்கையாக வைக்கப்பட்ட மாம்பழங்களில் ரசாயனம் அல்லது வித்தியாசமான வாசனை வரும்.
பழத்தின் தன்மை:
இயற்கையாக பழுத்த மாம்பழங்களை விட செயற்கையாக பழுத்த மாம்பழங்கள் ரொம்பவே மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். காரணம் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் போது அதன் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பழத்தின் செல் சுவர்களை உடைக்கும். இதன் காரணமாக தான் அது மென்மையாகிறது.
ஊசி போட்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் வெளிப்புறத்தில் சேதங்கள் இருக்கும். எனவே அவற்றை வாங்குவதை தவிர்க்கவும். அதுவே இயற்கையாக பழுத்த மாம்பழங்களின் வெளிப்புறத்தில் எந்தவிதமான கறைகள், சேதங்கள், புள்ளிகள் இருக்காது.
பேக்கிங் சோடா:
ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதில் மாம்பழங்களை போடவும். சிறிதளவு பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளுங்கள் 15 நிமிடம் கழித்து மாம்பழங்களை கழுவி பார்க்கவும். அதன் நிறம் மாறினால் அது ரசாயனம் கலந்த மாம்பழம் என்று அர்த்தம்.